சங்கரன்கோவில் கல்யாண வீட்டில் ரூ. 1 லட்சம் திருட்டு- பெண் கைது
சங்கரன்கோவில் திருமண மண்டபத்தில் ரூ.1 லட்சம் திருடிய பெண்ணை போலீசார் கைது செய்தனர். அவரிடமிருந்து பணம் கைப்பற்றப்பட்டது.
சென்னை பெரம்பலூர் பழைய பேருந்து நிலையம் பகுதியை சேர்ந்தவர் வேலாயுதம். இவரது தங்கைக்கு கடந்த மாதம் 18ம் தேதி சங்கரன்கோவில் சங்கரநாராயணசாமி கோவிலில் வைத்து திருணம் நடந்தது. பின்னர் கோயில் முன் அமைந்துள்ள திருமண மண்டபத்தில் மற்ற சடங்குகள் நடந்தன.
திருமண விழாவிற்கு வந்திருந்தவர்கள் கொடுத்த மொய்பணம் ஒரு பையில் வைக்கப்பட்டு இருந்தது. திடீரென்று பணம் வைத்திருந்த பை காணாமல் போனது. அதில் சுமார் ரூ.1 லட்சம் வரை இருந்ததாக கூறப்படுகிறது. இது குறித்து வேலாயுதம் சங்கரன்கோவில் நகர போலீசில் புகார் செய்தார்.
இதையடுத்து திருமணத்தின் போது எடுக்கப்பட்ட வீடியோவை போலீசார் பார்த்தனர். அதில் திருமண வீ்ட்டிற்கு சம்பந்தம் இல்லாத ஒரு பெண் மண்டபத்தில் அங்கும் இங்கும் உலாவியதை கண்டுபிடித்தனர். போலீசார் அந்த பெண் குறித்து விசாரித்தனர்.
விசாரணையில் அவர் சங்கரன்கோவில் சங்கர்நகர் 2வது தெருவை சேர்ந்த சகுந்தலா என்பது தெரிய வந்தது. போலீசார் சகுந்தலாவை பிடித்து விசாரித்தபோது மொய் பணம் திருடியதை ஒப்புக் கொண்டார். இதையடுத்து அவரிடமிருந்து ரூ.1 லட்சம் மொய் பணத்தை போலீசார் கைப்பற்றினர்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications