சிங்கள வீரர் ஜெயசூர்யா வருகையைக் கண்டித்து புதிய தமிழகம் கருப்புக் கொடி- 18 பேர் கைது
சென்னை: ராஜபக்சே கட்சியின் சார்பில் இலங்கை நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிடும் சிங்கள கிரிக்கெட் வீரர் ஜெயசூர்யா சென்னைக்கு வருவதைக் கண்டித்து சென்னை விமான நிலையத்தில் புதிய தமிழகம் கட்சியினர் கருப்புக் கொடி ஆர்ப்பாட்டம நடத்தினர். ஆனால் அவர்களது போராட்டத்திற்கு முன்பே ஜெயசூர்யா ரகசியமாக சென்னைக்கு வந்து சேர்ந்து விட்டார்.
இந்தக் குழப்பம் காரணமாக விமானம் மூலம் வந்த மும்பை இந்தியன்ஸ் அணிக்கு புதிய தமிழகம் கட்சியினர் கருப்புக் கொடி காட்டி குழப்பமாகி விட்டது.
போராட்டம் குறித்து முன்பே அறிந்திருந்த ஜெயசூர்யா மிகவும் ரகசியமான முறையில் சென்னைக்குள் நுழைந்து விட்டார். நேற்று காலையிலேயே கொழும்பிலிருநது நேரடியாக சென்னைக்கு வந்த அவர் படு ரகசியமான முறையில் விமான நிலையத்தைத விட்டு அழைத்துச் செல்லப்பட்டு விட்டார்.
அதை அறியாத புதிய தமிழகம் கட்சியினர் விமான நிலையத்தில் கூடி கருப்புக் கொடி ஆர்ப்பாட்டத்தை நடத்தினர். அப்போது மும்பை இந்தியன்ஸ் அணியினர் அங்கு வந்து கொண்டிருந்தனர்.
இதையடுத்து போலீஸார் குறுக்கிட்டு கருப்புக் கொடி காட்டிய 18 பேரைக் கைது செய்து அப்புறப்படுத்தினர். பின்னர் அனைவரும் விடுவிக்கப்பட்டனர்.
இந்தப் போராட்டம் குறித்து புதிய தமிழகம் கட்சியின் மாவட்டச் செயலாளர் ராஜேந்திர பிரசாத் கூறுகையில், ஜெயசூர்யா, இனவெறி பிடித்த ராஜபக்சேவுக்கு ஆதரவாக பிரசாரம் செய்தவர். அவரது கட்சி சார்பில் போட்டியிடுகிறார். இவரை ஒரு கிரிக்கெட் வீரராக பார்க்கக் கூடாது. இனவெறிப் படுகொலைக்குத் துணை போகும் நபராகவே பார்க்க வேண்டும் என்றார்.
இன்று சென்னையில் நடைபெறும் ஐபிஎல் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸும், மும்பை இந்தியன்ஸ் அணியும் மோதுகின்றன. மும்பை அணியில் ஜெயசூர்யா இடம் பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
-
பாக்கெட் தோசை மாவு வாங்கறீங்களா? பிரிட்ஜில் இட்லி மாவு வைக்கிறீங்களா? இதை முதல்ல தெரிஞ்சுக்கோங்க -
கூண்டோடு காலியாகிறது.. விசிக டாப் தலைகள் மொத்தமாக திமுகவில் ஐக்கியம்? சில்லு சில்லாக சிதறுது! -
ஒரு கூட்டு கிளியாக ஒரு தோப்பு குயிலாக! கோபத்தில் குட்டி சிறுத்தைகள்! வெள்ளைக் கொடியோடி தாய் சிறுத்தை -
சஞ்சு சாம்சன் மூலமாக சிஎஸ்கே அணிக்குள் நுழைய முயற்சிக்கும் அஸ்வின்.. பின்னணியில் நடப்பது என்ன? -
கூட்டுறவு வங்கிகளில் விவசாயிகள் பெற்ற பயிர்க்கடன் 100 சதவீதம் தள்ளுபடி! யாருக்கெல்லாம் கிடைக்கும்? -
Kerala Lottery: கடனை கட்ட முடியாததால் வீடு ஜப்தியாக இருந்தது.. 12 கோடி லாட்டரியில் வென்ற முதியவரின் சோக பின்னணி -
கோவை சூலூர் சிறுமியை கொன்றது ஏன்? குற்றவாளி கார்த்தி பரபரப்பு வாக்குமூலம் -
நடிகை ரம்பா வீட்டில் ஏற்பட்ட துயரம்.. "உலகமே வெறுமையாகி விட்டது” என உருக்கமான பதிவு -
திருச்சி கிழக்கு உள்பட 4 தொகுதிகளுக்கும் சேர்த்து இடைத்தேர்தல் நடைபெற வாய்ப்பு -
சென்னையில் செய்கூலி, சேதாரம் கட்.. திடீரென தங்கத்திற்கு வழங்கப்படும் பிரம்மாண்ட தள்ளுபடி.. ஏன்? -
சரண்டரான சி.வி.சண்முகம் டீம்.. மீண்டும் இணைகிறது அதிமுக.. எடப்பாடி போட்ட கண்டிஷன்! -
விவசாயிகளுக்கு விழுந்த சர்ப்ரைஸ்.. வேளாண் நகைக்கடன் ரூ.40000-ல் இருந்து 2 லட்சமாக உயர்வு












Click it and Unblock the Notifications