சட்டசபையில் பெரும் அமளி – அதிமுக எம்.எல்.ஏக்கள் கூண்டோடு சஸ்பெண்ட்

இன்று காலை சட்டசபை கூடியதும் பட்ஜெட் மீதான விவாதம் தொடர்ந்த்து. அப்போது திமுக உறுப்பினரான அனிதா ராதாகிருஷ்ணன் பேசினார். அப்போது அவர் பேசிய கருத்துக்களைக் கண்டித்து அதிமுக உறுப்பினர்கள் ஹரி மற்றும் அருண்மொழித்தேவன் ஆகியோர் கோஷம் எழுப்பினர். பதிலுக்கு திமுக உறுப்பினர்களும் கோஷம் எழுப்பினர்.
அதிமுக உறுப்பினர்கள் இருவரையும் அமைதியாக அமருமாறு சபாநாயகர் ஆவுடையப்பன் உத்தரவிட்டார். ஆனால் அவர்கள் கேட்காமல் தொடர்ந்து காரசாரமாக கோஷமிட்டதால் அவர்களை அவையிலிருந்து வெளியேறேற அவைக் காவலர்களுக்கு உத்தரவிட்டார் சபாநாயகர்.
இதையடுத்து இரு உறுப்பினர்களும் வெளியேற்றப்பட்டனர். இதைக் கண்டித்து பிற அதிமுக உறுப்பினர்கள் வெளிநடப்புச் செய்தனர். பின்னர் மீண்டும் அவர்கள் சபைக்குத் திரும்பி வந்தனர். வந்த வேகத்தில் சபாநாயகர் இருக்கையை முற்றுகையிட்டு பெரும் ரகளையில் இறங்கினர்.
இதையடுத்து அனைவரையும் வெளியேற்றுமாறு அவைக் காவலர்களுக்கு உத்தரவிட்டார் சபாநாயகர் ஆவுடையப்பன்.
அதிமுகவினரின் செயலைக் கண்டித்து அவர்கள் அனைவரும் வருகிற 9ம் தேதி வரை சஸ்பெண்ட் செய்யப்படுவதாக சபாநாயகர் உத்தரவிட்டார்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ்












Click it and Unblock the Notifications