உள்துறை அனுமதி வழங்கினால் தூத்துக்குடி - கொழும்பு இடையே கப்பல் சேவை: மத்திய கப்பல்துறை
தூத்துக்குடி: உள்துறை அமைச்சகம் அனுமதி வழங்கினால் தூத்துக்குடி - கொழும்பு இடையே பயணிகள் கப்பல் போக்குவரத்து தொடங்கும் என மத்திய கப்பல்துறை அமைச்சக இணை செயலாளர் ராகேஷ் ஸ்ரீவாஸ்தவ் தெரிவித்தார்.
தூத்துக்குடி துறைமுக பொறுப்பு கழகம் சார்பில் அனைத்திந்திய ஆட்சி மொழி கருத்தரங்கம் மற்றும் தூத்துக்குடி துறைமுக பொறுப்பு கழகத்தில் ஆட்சி மொழி இந்தி அமலாக்கத்தின் வெள்ளி விழா நடந்தது.
இந்த விழாவுக்கு துறைமுக பொறுப்பு கழக தலைவர் ராவ் தலைமை வகித்தார். விழாவில் கப்பல் துறை அமைச்சக இணை செயலாளர் ராகேஷ் ஸ்ரீவாஸ்தவாவும் கலந்து கொண்டார்.
நிகழ்ச்சிக்கு பின் நிருபர்களிடம் அவர் கூறுகையில், '2009 - 10ம் ஆண்டில் நாட்டில் உள்ள 12 பெரிய துறைமுகங்கள் மூலம் 560 மில்லியன் டன் சரக்குகள் கையாளப்பட்டுள்ளது. இது 5.86 சதவீத வளர்ச்சியாகும்.
2010-11ம் ஆண்டில் 600 டன் சரக்கு கையாள இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. வரும் ஆண்டுகளில் எந்தந்த துறைமுகங்களுக்கு என்னென்ன சரக்குகளை பகிர்ந்தளிப்பது என்பது குறித்து மத்திய கப்பல் அமைச்சகம் ஆலோசனை நடத்தி வருகிறது.
தூத்துக்குடி துறைமுக பகுதியின் தற்போதைய ஆழம் 12.8 மீட்டராகும். வரும் ஆண்டுகளில் மேலும் 14 மீட்டர் ஆழப்படுத்தப்படும். தூத்துக்குடி துறைமுகத்தில் 8வது கப்பல் தளத்தி்ல் சரக்கு பொட்டக முனையம் அமைக்கப்படும்.
தூத்துக்குடியில் இருந்து கொழும்பு நகருக்கு பயணிகள் கப்பல் போக்குவரத்தை தொடங்குவது குறித்து மத்திய உள்துறை அமைச்சகத்துடன் ஆலோசனை நடத்தி வருகிறோம்.
மத்திய அரசு அனுமதி அளித்தால் தூத்துக்குடியில் இருந்து பயணிகள் கப்பல் போக்குவரத்துச் சேவைக்கான திட்டம் துவக்கப்படும் என்று கூறினார்.
-
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
"முதலமைச்சருக்கு நன்றி.. ஆனால்! எதிரியின் எதிரி நண்பனா? விஜய் ரசிகர்கள் குறித்து பேசிய அஜித் சகோதரர் -
வீரமணி ஒரே போடு.. திருச்சியில் முதலமைச்சர் விஜய் பேசிய அந்த பேச்சால் மொத்த பேருக்கும் முகச்சுளிப்பு? -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம் -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
கோவையில் அருவியாக மாறிய மேம்பாலம் .. மேட்டுப்பாளையம் ஊட்டி செல்லும் வழியில் மாறிய காட்சி -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
அரசியல் மோதலை விடுங்க.. 'கலைஞர்' கருணாநிதி பிறந்தநாளுக்கு முதல்வர் விஜய் போட்ட பதிவு! -
விஜய்க்கு அரசு பாதுகாப்பு மேல நம்பிக்கை இல்லையா? தனி பாதுகாவலரோடு வருவது ஏன்? லாக் செய்த அதிமுக -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக












Click it and Unblock the Notifications