ஆயிஷாவிடம் 2 மணி நேரம் ஹைதராபாத் போலீஸார் விசாரணை
ஹைதராபாத்: சோயப் மாலிக் மீது குற்றம் சாட்டியுள்ள ஹைதராபாத் பெண் ஆயிஷா சித்திக்கியிடம் ஹைதராபாத் போலீஸார் கிட்டத்தட்ட 2 மணி நேரம் விசாரணை நடத்தினர்.
சோயப் மாலிக் என்னைத் திருமணம் செய்து கொண்டார். அதன் பின்னர் இப்போது சானியாவை கல்யாணம் செய்ய முயல்கிறார். எனக்கு டைவர்ஸ் கொடுத்து விட்டு அவர் கல்யாணம் செய்ய வேண்டும் என்று குற்றம் சாட்டியுள்ளார் ஆயிஷா. இதுதொடர்பான ஆதாரங்களையும் ஆயிஷா தரப்பு வெளியிட்டுள்ளது.
இதையடுத்து தற்போது ஹைதராபாத் வந்து சானியா வீட்டில் தங்கியுள்ள சோயப் மாலிக்கிடம் போலீஸார் 2 மணி நேரம் விசாரணை நடத்தினர்.
இதைத் தொடர்ந்து நேற்று ஆயிஷாவிடம் குற்றப் பிரிவு போலீஸார் விசாரணை நடத்தினர். கிட்டத்தட்ட 2 மணி நேரம் இந்த விசாரணை நடந்த்து. இந்த விசாரணையின்போது சோயப் மாலிக் மீதான புகார்களுக்கான ஆதாரங்கள் உள்ளிட்டவை குறித்து போலீஸார் விசாரித்தறிந்தனர்.
டென்ஷனைக் குறைக்க விருந்துக்குப் போன சானியா- சோயப்
இதற்கிடையே, ஆயிஷா சித்திக்கி எழுப்பியுள்ள பிரச்சினையால் பெரும் டென்ஷனில் உள்ள சானியா மிர்ஸாவும், சோயப் மாலிக்கும், அதைக் குறைக்கும் இரவு விருந்து சாப்பிட ஹோட்டலுக்குச் சென்றனர்.
திங்கள்கிழமை சானியாவும், சோயப்பும் இணைந்து செய்தியாளர்களைச் சந்தித்தனர். அன்று இரவு, சானியா, சோயப் மாலிக் ஆகியோர் ஒரு ஹோட்டலுக்குச் சென்று சாப்பிட்டனர். அவர்களுடன் சானியாவின் தங்கை அனம், இன்னொரு உறவினர் ஆகியோரும் உடன் சென்றிருந்தனராம்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications