சானியா - மாலிக் திருமணத்துக்கு குடும்பக் கட்டுப்பாட்டு சாதன பரிசு: பாக். அமைச்சர் திட்டம்!
கராச்சி: சோயப் மாலிக் - சானியா மிர்சா திருமணத்துக்கு குடும்ப கட்டுப்பாட்டு சாதனங்களைப் பரிசளிக்கப் போவதாக பாகிஸ்தான் மக்கள் நல்வாழ்வு அமைச்சர் ஃபிர்தௌஸ் அஷ்வின் அவான் கூறியுள்ளார்.
இந்திய டென்னிஸ் வீராங்கனை சானியா மிர்சாவை கைப்பிடிக்கப் போகும் முன்னாள் கிரிக்கெட் கேப்டன் சோயப் மாலிக்கின் சொந்த ஊர்க்காரர் அமைச்சர் ஃபிர்தௌஸ் அஷ்வின்.
கராச்சி அருகில் உள்ள சியல்கோட் தான் இவர்கள் இருவருக்கும் சொந்த ஊர்.
சானியாவையும், மாலிக்கையும் எப்படியாவது சம்மதிக்க வைத்து மக்கள்தொகை பெருக்க கட்டுப்பாடு தொடர்பான விளம்பரங்களில் நடிக்க வைத்து விட வேண்டும் என்பது இவரது விருப்பம்.
குடும்பக்கட்டுப்பாடு குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்த சானியாவும், சோயப் மாலிக்கும் உதவுவார்கள் என நம்புவதாக அவர் பாகிஸ்தான் பத்திரிகைகளுக்கு அளி்த்த பேட்டியில் கூறியுள்ளார்.
மேலும் அவர்களது திருமணத்தில் கலந்து கொள்ள ஆவலாக இருப்பதாவும் இவர் கூறியுள்ளார்.


Click it and Unblock the Notifications
