கலவரப் பகுதிகளைப் பார்வையிட வந்த பாஜக குழுவினர் கைது
ஹைதராபாத்: மதக் கலவரத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளைப் பார்வையிட பாஜக குழுவுக்கு ஹைதராபாத் போலீஸார் அனுமதி மறுத்து விட்டனர்.
சமீபத்தில் கடும் மதக் கலவரத்தால் பாதிக்கப்பட்ட ஹைதராபாத் நகரில் சுற்றுப்பயணம் செய்து உண்மை கண்டறியும் ஆய்வை நடத்துவதற்காக பாஜக ராஜ்யசபா உறுப்பினர் பிரகாஷ் ஜாவேத்கர் தலைமையில் ஒரு குழு அமைக்கப்பட்டது. ஐந்து பேர் அடங்கிய இந்தக் குழுவினர் ஹைதராபாத்தில் ஹைதராபாத் வந்தனர்.
மதக் கலவரத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளைப் பார்வையிட அவர்கள் முயன்றபோது போலீஸார் அவர்களைக் கைது செய்து மேற்கொண்டு செல்ல விடாமல் தடை போட்டு விட்டனர்.
ஜாவேத்கர் தவிர எம்.பிக்கள் ஷானப்பா, பிரகலாத் ஜோஷி, தேசிய செய்தித் தொடர்பாளர் நிர்மலா சீதாராமன், செயலாளர் டாக்டர் லட்சுமண் ஆகியோரும் இக்குழுவில் இடம் பெற்றிருந்தனர்.
பாஜக அலுவலகத்திலிருந்து அவர்கள் வன்முறையால் பாதிக்கப்பட்ட பகுதிகளைப் பார்வையிடக் கிளம்பியபோது அவர்களை துணை போலீஸ் கமிஷனர் ஹரிகுமார் தலைமையிலான போலீஸார் தடுத்து நிறுத்தினர். தடை உத்தரவு நீடித்து வருவதால் அஹ்கு போக முடியாது என்று கூறினர். ஆனால் தாங்கள் திட்டமிட்டபடி போகப் போவதாக பாஜக குழுவினர் கூறியதால், அவர்களுக்கும், போலீஸாருக்கும் இடையே வாதம் மூண்டது.
இறுதியில், பாஜக குழுவினரை போலீஸார் கைது செய்தனர். போலீஸாரின் இந்த செயலுக்கு நிர்மலா சீதாராமன் கண்டனம் தெரிவித்தார். இதுகுறித்து அவர் கூறுகையில், மாநில அரசும், காவல்துறையும் சர்வாதிகாரப் போக்கில் நடந்து கொள்வதாக அவர் குற்றம் சாட்டினார்.
பாஜக குழுவினருடன் மேலும் 50 பாஜகவினரும் கைது செய்யப்பட்டு அப்புறப்படுத்தப்பட்டனர்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications