262 பிளஸ்டூ மாணவர்களுக்கு ஏப். 22ம் தேதி மறு தேர்வு
சென்னை: பிளஸ்டூ இயற்பியள் பாடத்துக்கான விடைத்தாள்கள் காணாமல் போனதால் பாதிக்கப்பட்டுள்ள திருச்சி மாவட்டம் முசிறி அரசு மேல் நிலைப்பள்ளியைச் சேர்ந்த 262 மாணவ, மாணவியருக்கு ஏப்ரல் 22ம் தேதி மறு தேர்வு நடத்தப்படவுள்ளது.
இதுதொடர்பாக அரசு தேர்வுகள் இயக்குனர் டி.வசுந்தராதேவி வெளியிட்டுள்ள செய்தி குறிப்பு:
கடந்த மார்ச் மாதம் 8-ந் தேதி பிளஸ்-2 இயற்பியல் தேர்வு நடந்தது. முசிறி அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி மையத்தில் 262 மாணவ-மாணவிகள் தேர்வு எழுதினார்கள். அவர்களின் விடைத்தாள் அடங்கிய கட்டு காணாமல் போனதாக அறியப்பட்டு, அதனை மீட்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதுவரை விடைத்தாள் கட்டு கிடைக்கவில்லை.
இந்த நிலையில், கீழே கொடுக்கப்பட்டுள்ள பதிவு எண்கள் கொண்ட மாணவ-மாணவிகளுக்கு (தேர்வு எழுதியவர்கள் மட்டும்) வருகிற 22-ந் தேதி (வியாழக்கிழமை) காலை 10 மணிக்கு முசிறி அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியிலேயே மறுதேர்வு நடத்தப்பட உள்ளது.
1. அரசு மேல்நிலைப்பள்ளி, அய்யம்பாளையம் - பதிவு எண் 469874 முதல் 469951 வரை (469879 தவிர)
2. அரசு மேல்நிலைப்பள்ளி, தண்டலைப்புதூர் - பதிவு எண் 469968 முதல் 470052 வரை (470045 நீங்கலாக)
3. அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி, முசிறி - பதிவு எண் 470272 முதல் 470375 வரை (470274, 470308, 470342 தவிர)
மேற்கண்ட பதிவு எண்கள் கொண்ட மாணவ-மாணவிகள் 22-ந் தேதி நடைபெறும் மறுதேர்வினை எழுத வேண்டும். மறுதேர்வு குறித்து மேலும் விவரம் தேவைப்பட்டால் மாணவர்கள் தாங்கள் படித்த பள்ளியின் தலைமை ஆசிரியரை அணுகி தெரிந்து கொள்ளலாம் என்று அவர் தெரிவித்துள்ளார்.
நேற்று தமிழக சட்டசபையில் இந்தப் பிரச்சினை எதிரொலித்தது. அதற்குப் பதிலளித்த பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு, இவர்களுடைய விடைத்தாள் கட்டுகள் கிடைக்காவிட்டால் மறு தேர்வு நடத்தப்படும். அதேசமயம், இவர்களுக்கு கருணை மதிப்பெண்கள் வழங்கப்படாது. அப்படி வழங்கினால் அதை மற்ற மாணவர்கள் ஆட்சேபிப்பார்கள் என்று கூறியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
-
தமிழ் புத்தாண்டு பலன்: கன்னி ராசிக்கு 100 மார்க்.. ரேஞ்சே மாறப்போகுது.. பொற்காலம் ஆரம்பம் -
கோவை வடக்கு, மயிலாப்பூர்.. பாஜக போட்டியிடும் 27 தொகுதிகள் எவை? எடப்பாடி பழனிசாமி வெளியிட்ட அறிவிப்பு -
பிள்ளையை கிள்ளி விட்ட இஸ்ரேல்.. தொட்டிலை ஆட்டும் அமெரிக்கா! வெறி கொண்டு அடிக்கும் ஈரான்.. குண்டு மழை -
உளவுத்துறை சொன்னது என்ன? 155 சீட் பின்னணியில் அமித்ஷா தந்த கிரீன் சிக்னல்! எடப்பாடி முகம் பிரகாசம் -
3 அமைச்சர்களை எதிர்க்கும் தமாக! அதிமுக – பாஜக வழங்கிய தொகுதியை கவனிச்சீங்களா.. 5 தொகுதியும் கடினம் -
கரண்ட் பில் இலவசம்? இனி கட்ட வேண்டாமா? மத்திய அரசு ₹78,000 மானியம்! உங்க வீட்டிற்கு எப்படி வாங்குவது -
பிடுங்கப்படும் டிரம்பின் பவர்! அதிபர் பதவியிலேயே இருந்தாலும் அதிகாரம் இருக்காது.. நிலைமை மோசம்! -
நல்ல காலம் பொறக்குது.. தங்கம், வெள்ளியை முடிஞ்ச அளவு வாங்குங்க! ‘கோல்டுமேன்’ அடுக்கும் காரணங்கள்! -
மருமகள் உள்ளே, சீனியர் வெளியே? 55 கால சாம்ராஜ்ஜியத்திற்கு செக்! காட்பாடி திருப்பத்தின் பின்னணி என்ன -
இரட்டை இலையை விட்டுவிட்டு.. தாமரைக்கு தாவும் கூட்டணி கட்சிகள்! எங்கேயோ இடிக்குதே! -
ஈரானை சுத்துப்போடும் ‘பாராசூட் அட்டாக்’ டீம்.. டிரம்ப் பெரிய பிளான்.. போர் இப்போதைக்கு முடியாது? -
10 சவரன் கையில், 8 சவரன் பில்லில்! பழைய நகையை மாற்றினால் நடக்கும் ரகசியம்.. ஏமாறாமல் இருக்க இதோ வழி












Click it and Unblock the Notifications