சென்னை – அரைகுறை பாலத்திலிருந்து பறந்து ரயில்வே டிராக்கில் விழுந்த கார்!
சென்னை: அரைகுறையாக கட்டப்பட்ட மேம்பாலத்தின் மீது சென்ற கார், 50 அடி உயரத்தில் இருந்து ரயில் தண்டவாளத்தில் விழுந்தது.
சென்னை, பல்லாவரம் பழைய ஜிஎஸ்டி சாலையில் இருந்து பழைய பல்லாவரம் செல்வதற்காக, ரயில்வே தண்டவாளத்தை கடக்கும் வகையில் மேம்பாலம் ஒன்று கட்டப்பட்டு வருகிறது.
சாலையை ஒட்டியுள்ள மேம்பால பகுதிகளை நெடுஞ்சாலைத் துறையும், தண்டவாளத்தின் மேலை வரக்கூடிய பகுதியை ரயில்வே துறையும் கட்டுவதாக ஒப்பந்தம்.
நெடுஞ்சாலைத்துறை தனது பங்கு வேலைகளை முடித்துவிட்டது. ரயில்வே தனது பணிகளை இன்னும் துவக்கவில்லை.
அதாவது, தண்டவாளத்தின் இரண்டு பக்கதில் இருந்தும் மேம்பால பாதை எழுப்பப்பட்டு விட்டது. ஆனால், தண்டவாளத்தின் மத்தியில் இரண்டு பாதையும் இணைக்கப்படாமல் உள்ளது.
பாலம் அரைகுறையாக பாதியில் நிற்பது பக்கவாட்டில் இருந்து பார்த்தால் தெரியும். பாலத்திற்காக போடப்பட்ட சாலையில் இருந்து பார்த்தால் தெரிய வாய்ப்பில்லை.
தினசரி அவ்வழியே செல்லும் வாகன ஓட்டிகளுக்கும், உள்ளூர்வாசிகளுக்கும் இந்த நிலவரம் தெரியும்.
ஆனால், நிலைமை தெரியாத வாகனஓட்டிகளை கவனத்தில் கொண்டு இந்தப்பாதை முற்றிலும் மூடப்பட்டிருக்க வேண்டும். அல்லது எச்சரிக்கை பலகை வைக்கப்பட்டிருக்க வேண்டும்.
ஆனால் இந்த முன்னெச்சரிக்கை நடவடிக்கை எதையும் நிர்வாகத்தினர் செய்யவில்லை.
இந்நிலையில் நேற்று காலை ஜிஎஸ்டி சாலையில் இருந்து பழைய பல்லாவரத்துக்கு செல்ல திட்டமிட்டு, இந்த பாலத்தில் ஏறிய கார் ஒன்று தண்டவாளத்தின் மீது தலைகுப்புற விழுந்து விபத்துக்குள்ளானது.
சென்னை வியாசர்பாடியைச் சேர்ந்த திவாகர் என்ற 30 வயது இளைஞர் இந்த காரை ஓட்டி வந்துள்ளார். பாலம் அரைகுறையாக நிற்பது அவருக்கு தெரியவில்லை.
வேல்ஸ் கல்லூரிக்கச் செல்வதற்காக படு வேகமாக காரை ஓட்டிச் சென்ற அவர் பாலத்தின் நடுப்பகுதி அருகே சென்ற போது தான், பாலம் பாதியில் நிற்பதை பார்த்தார். அதிர்ச்சி அடைந்த திவாகர் திடீர் பிரேக் போட்டு காரை நிறுத்த முயற்சி செய்தார்.
அதற்குள் 50 அடி உயர பாலத்தில் இருந்து கார், சினிமாவில் வருவதை போல பறந்து வந்து தண்டவாளத்தில் தலைகீழாக கவிழ்ந்து விழுந்து நொறுங்கியது. காரின் உள்ளே சிக்கிக்கொண்ட திவாகர் உயிருக்கு போராடினார்.
பாலத்தில் இருந்து கார் பறந்து வந்து தண்டவாளத்தில் விழுந்ததை பார்த்த பொதுமக்கள் உடனடியாக ஓடிச்சென்று காரை நிமிர்த்தி காரில் சிக்கி உயிருக்கு போராடிய திவாகரை மீட்டு தனியார் மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு அனுப்பி வைத்தனர்.
காலில் பலத்த காயத்துடன் உயிருக்கு ஆபத்தான நிலையில் திவாகர் சிகிச்சை பெற்று வருகிறார். அதிர்ஷ்டவசமாக கார் விழுந்தபோது அந்த வழியாக மின்சார ரயில் எதுவும் வராததால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது.
தாம்பரம் தீயணைப்பு படையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று மீட்புப்பணிகளை மேற்கொண்டனர். இந்த சம்பவம் காரணமாக அப்பாதையில் ரயில் போக்குவரத்து ஒன்றரை மணி நேரம் பாதிக்கப்பட்டது.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications