இலங்கை நாடாளுமன்றத் தேர்தல் வாக்கு எண்ணிக்கை- வட கிழக்கில் தமிழ் தேசியக் கூட்டமைப்பு முன்னணி

ரணில் விக்கிரமசிங்கேவின் கூட்டணிக்கு 3வது இடமும், பொன்சேகா கூட்டணிக்கு 4வது இடமும் கிடைத்துள்ளன.
தேசிய அளவில் ராஜபக்சே கூட்டணி முதலிடத்தையும், ரணில் கூட்டணி 2வது இடத்தையும், பொன்சேகா கூட்டணி 3வது இடத்தையும் பிடித்துள்ளன.
மொத்தம் உள்ள 225 தொகுதிகளில் இதுவரை 100க்கும் மேற்பட்ட இடங்களில் ராஜபக்சே கூட்டணி முன்னணியில் உள்ளது.
ராஜபக்சேவின் மகன் நமல் ராஜபக்சே, தனது சொந்த மாவட்டமான ஹம்பந்தோட்டாவில் வென்றுள்ளார்.
டக்ளஸ் வெற்றி
யாழ்ப்பாணத்தில் ராஜபக்சே ஆதரவுடன் போட்டியிட்ட டக்ளஸ் தேவானந்தா வெற்றி பெறுகிறார். இங்கு தமிழ் தேசியக் கூட்டமைப்பின் முக்கியத் தலைவரான மாவை சேனாதிராஜா 2வது இடத்தைப் பிடிக்கிறார்.
தமிழர் தாயகத்திற்குட்பட்ட திரிகோணமலை மாவட்டத்தில் 2 எம்.பிக்களும் சிங்களர்களாகவே தேர்வாகியுள்ளனர்.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு 12 எம்.பிக்கள்
தற்போதைய நிலவரப்படி தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு வட கிழக்கில், 12 எம்.பிக்கள் கிடைக்கக் கூடிய நிலை இருப்பதாக அங்கிருந்து வரும் செய்திகள் கூறுகின்றன.
ஜெயசூர்யா வெற்றி
கிரிக்கெட் வீரரும், ராஜபக்சே கட்சி சார்பில் போட்டியிட்டவருமான சனத் ஜெயசூரியா, மாத்தரை மாவட்டத்திலிருந்து வெற்றி பெற்று எம்.பி. ஆகிறார்.
தொடர்ந்து வாக்குகளை எண்ணும் பணி தொடங்கி நடந்து வருகிறது.
மிகக் குறைந்த வாக்குப் பதிவு
முன்னதாக நேற்று நடந்த வாக்குப் பதிவில் மிகக் குறைந்த அளவிலான வாக்குகளே பதிவானது. நாடு முழுவதும் 55 சதவீத வாக்குகள் பதிவாகின.
இதுவரை நடந்த தேர்தல்களிலேயே இதுதான் மிகக் குறைந்த வாக்குப் பதிவு என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் சமீபத்தில் நடந்த அதிபர் தேர்தலின்போது 75 சதவீத வாக்குகள் பதிவாகின என்பது குறிப்பிடத்தக்கது.
யாழ்ப்பாணத்தில் 18 சதவீத வாக்குப் பதிவு
யாழ்ப்பாணத்தில் வெறும் 18 சதவீத அளவிலான வாக்குகளே பதிவாகியிருந்தன.
இதேபோலத்தான் பிற தமிழர் பகுதிகளிலும் மிக்க் குறைந்த அளவிலான வாக்குகள் பதிவாகியிருந்தன.












Click it and Unblock the Notifications