ஜெர்மன் எம்.பிக்களின் அவதூறுப் பேச்சு- நடவடிக்கை கோரி பிரதமருக்கு மோடி கடிதம்

இதுதொடர்பாக பிரதமர் மன்மோகன் சிங்குக்கு மோடி எழுதியுள்ள கடித்த்தில் கூறியுள்ளதாவது...
ஜெர்மனி நாட்டு எம்.பிக்கள் குழு ஒரே ஒரு நாள் அகமதாபாத் நகருக்கு வருகை தந்து, அந்த வருகையின் இறுதியில், குஜராத்தில் சட்டம் முடங்கிப் போய் விட்டது, மனித உரிமை மீறல்களில் நான் ஈடுபட்டு வருவதாக கூறியுள்ளது. இது மிகவும் கண்டனத்துக்குரியதாகும்.
2002ம் ஆண்டு நடந்த குஜராத் வன்முறைச் சம்பவம் குறித்து ஒரே நாளில் இந்தக் குழு எப்படி ஒரு ஆய்வு முடிவுக்கு வந்த்து என்று தெரியவில்லை.
எனது பெயருக்கு அவர்கள் அவதூறு இழைத்துள்ளதன் மூலம் குஜராத் மாநிலத்திற்கும், இந்த நாட்டுக்கும் அவர்கள் பெரும் அவப்பெயரை ஏற்படுத்தியுள்ளனர்.
என்னை மிகவும் அவதூறாக அவர்கள் விமர்சித்தள்ளனர். இது மிகவும் கடுமையான குற்றச்சாட்டு. ஏற்கவே முடியாத மிகப் பெரிய அவதூறு.
ஜெர்மன் எம்.பிக்கள் குழு நிபந்தனையற்ற மன்னிப்பு கேட்க வேண்டும். இந்த விவகாரம் குறித்து ஜெர்மன் தூதருடன் இந்திய அரசு பேச வேண்டும். பிரதமர் இந்த விவகாரத்தில் தலையிட்டு ஜெர்மன் தூதரிடம் பேசி விளக்கம் கேட்குமாறு வெளியுறவு அமைச்சகத்திற்கு உத்தரவிட வேண்டும்.
மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஒரு அரசு குறித்து அவதூறான முறையில் செய்திகளைப் பரப்ப இந்திய ஊடகங்களை ஜெர்மனி தூதுக்குழு பயன்படுத்தியிருப்பது மிகவும் மோசமான செயல் என்று கூறியுள்ளார் மோடி.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ்












Click it and Unblock the Notifications