ஆட்டோமொபைல் உற்பத்தியில் உலகில் நம்பர் 2 இந்தியாதான்!

உலகமெங்கும் கார் உற்பத்தித் தொழிற்சாலைகள் பல்வேறு சிக்கல்களை எதிர்நோக்கி வருகின்றன. சில தொழிற்சாலைகள் மூடப்பட்டு விட்டன. ஆனால் இந்தியாவில் மட்டும் தொடர்ந்து புதிய தொழிற்சாலைகள் திறக்கப்படுவதோடு, விற்பனையும் பெருமளவு அதிகரித்து வருகிறது.
இதற்கு முக்கிய காரணம் இந்திய அரசு அளித்து வரும் பல்வேறு நிதிச் சலுகைகளே. கார் உற்பத்தி மற்றும் விற்பனை மட்டுமல்லாது, இதர மோட்டார் வாகன உற்பத்தியிலும் கணிசமான முன்னேற்றம் கண்டுள்ளது இந்தியா.
இதுகுறித்து SIAM அமைப்பு வெளியிட்டுள்ள புள்ளி விவரப்படி, கார்கள், பலநோக்கு பயன்பாட்டு வாகனங்கள், கனரக வாகனங்கள் தயாரிப்பில் 42 சதவிகித வளர்ச்சியை எட்டியுள்ளது சீனா. அதற்கு அடுத்த இடத்திலிருப்பது இந்தியாதான். கடந்த ஆண்டு, 27 சதவிகித வளர்ச்சியை இந்தத் துறையில் பெற்றுள்ளது இந்தியா. ஜெர்மனி, பிரான்ஸ், ஜப்பான் மற்றும் அமெரிக்கா போன்றவை கூட இந்தியாவுக்கு அடுத்த இடத்தில்தான் உள்ளன.
இலகு ரக வாகன விற்பனையைப் பொறுத்தவரை உலகில் முன்னணி வகிப்பது இந்தியாதானாம். 25 சதவிகித வளர்ச்சியை இதில் எட்டியுள்ளதாம் இந்தியா.
ஜெர்மனி (23), பிரேசில் (11), பிரான்ஸ் (11), இத்தாலி (-0.2), பிரிட்டன் (-6), ஜப்பான் (-9), யுஎஸ் (-21) மற்றும் ரஷ்யா (-50) ஆகிய நாடுகளில் மோட்டார் வாகன சந்தை வளர்ச்சியை காட்டிலும் இந்தியா அதிக வளர்ச்சி கண்டுள்ளது.
இந்தியாவை விட அதிக வளர்ச்சியை சந்தித்த நாடு சீனா மட்டுமே. சீனாவில் கடந்த நிதியாண்டு காலத்தில் மோட்டார் வாகன சந்தை 42 விழுக்காடு உயர்ந்துள்ளது.
கடந்த ஜனவரி மாதத்தில் அங்கு வாகன வரி 50 விழுக்காடு குறைக்கப்பட்டதன் எதிரொலியாக இந்த வளர்ச்சி ஏற்பட்டுள்ளது.
-
கதறும் கராச்சி.. குடிநீர், மின்சாரம், கேஸ் எதுவும் இல்லை.. சிந்து நதியை நிறுத்தியதால் நிலைமை மோசம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
இனி ஒன்று இல்லை.. இரண்டு OTP-க்கள் வேண்டும்.. ஒரு பைசா கூட ஏமாற்ற முடியாது.. அதிரடி அறிவிப்பு -
டோல் கட்டணத்தைத் தவிர்க்க.. இதை மட்டும் பண்ணாதீங்க.. மத்திய அரசின் வார்னிங்.. கவனம்! -
பாலைவனத்தில் பதுங்கும் சீன டிராகன்... பதறும் அமெரிக்கா.. வெறும் 90 நொடிகளில் எல்லாமே முடிஞ்சுடும் -
சென்னை துறைமுகம் மதுரவாயல் ஈரடுக்கு மேம்பாலம்: 60% பணிகள் ஓவர்! போக்குவரத்து நெரிசல் விரைவில் முடிவு -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல்












Click it and Unblock the Notifications