சேவாபாரதி அலுவலகத்தில் தீவைப்பு - குளச்சலில் பரபரப்பு
குளச்சல்: குளச்சலில் சேவாபாரதி அலுவலகத்தின் முகப்புப் பகுதி மர்ம நபர்களால் தீ வைத்து எரிக்கப்பட்டன.
குளச்சல், சீம்பிளிவிளையில் சிவதனுசு என்ற பெயரில் சேவாபாரதி அலுவலகம் செயல்பட்டு வருகிறது. இதில் இலவச கம்யூட்டர் பயிற்சி, தையல் பயிற்சி, மருத்துவ முகாம்கள், ஓவிய பயிற்சி, சுயஉதவி குழுக்களுக்கான பயிற்சி உள்ளிட்டவை நடத்தப்பட்டு வருகின்றன.
நேற்று முன்தினம் நள்ளிரவு சுமார் 1 மணி அளவில் மர்ம நபர்கள் சிலர் சேவாபாரதி அலுவலகத்தின் முன்பக்க கதவு மற்றும் அலுவலகத்தின் முன் நிறுத்தப்பட்டிருந்த பைக் ஆகியவற்றை பெட்ரோல் ஊற்றி தீ வைத்து எரித்ததுடன் அலுவலகத்தின் மேல் கல்வீசி தாக்கியுள்ளனர்.
அலுவலகத்தின் உள்பகுதியில் தூங்கி கொண்டிருந்த சிவபெருமாள் என்பவர் சப்தம் கேட்டு எழுந்து பார்த்தபோது முன்பக்க கதவு தீபிடித்து எரிந்து கொண்டிருந்தது.
தண்ணீர் ஊற்றி தீயை அணைத்து கதவை திறந்து வெளியே வந்து பார்த்தபோது பக்கத்து வீட்டை சேர்ந்த அசோக் குமார் என்பவர் அலுவலகத்தின் மு்ன் நிறுத்தி வைத்திருந்த பைக் எரிந்து கொண்டிருந்ததை பார்த்தார்.
குடிநீர் வால்வுகளை திறப்பதற்காக அவ்வழியே சென்ற குளச்சல் நகராட்சி ஊழியர்கள் தீவைப்பு சம்பவத்தை அறிந்து குளச்சல் போலீசுக்கு தகவல் தெரிவித்தனர்.
ஏடிஎஸ்பி பெருமாள் தலைமையில் போலீசார் விரைந்து சென்று பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். நேற்று அதிகாலை நெல்லை சரக டிஐஜி சண்முகராஜேஸ்வரன் சம்பவ இடத்தை பார்வையிட்டார்.
எரிந்து நாசமான பைக்கை போலீசார் கைப்பற்றி குளச்சல் போலீஸ் ஸ்டேஷன் கொண்டு சென்றனர்.
சேவாபாரதி அலுவலகம் எரிக்கப்பட்ட சம்பவம் அறிந்த பாஜ மூத்த தலைவர் காந்தி தலைமையில் சேவாபாரதி அலுவலகத்தில் இருந்து குளச்சல் அண்ணா சிலை வரை ஊர்வலமாக சென்று குளச்சல் போலீஸ் நிலையத்தில் புகார் மனு கொடுத்தார்.
இந்த சம்பவத்தை தொடர்ந்து குளச்சல் நகரம் முழுவதும் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. அசம்பாவிதங்களை தடுக்கும் வகையில் எஸ்பி ராஜேந்திரன் தலைமையில் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர்.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications