அமெரிக்கா, பிரேசிலில் 8 நாள் பயணம்- புறப்பட்டார் பிரதமர்
டெல்லி: 8 நாள் அமெரிக்கா மற்றும் பிரேசில் பயணத்தை பிரதமர் மன்மோகன் சிங் இன்று தொடங்கினார்.
அமெரிக்காவில் நான்கு நாட்கள் தங்கும் பிரதமர், அங்கு நடைபெறும் அணு பாதுகாப்பு மாநாட்டில் பங்கேற்கவுள்ளார். அதேபோல பிரேசிலில் பிரேசில்-ரஷ்யா-இந்தியா-சீனா கூட்டமைப்பின் (பிரிக்) மாநாட்டிலும், இந்தியா-பிரேசில்-தென் ஆப்பிரிக்கா (இப்சா) மாநாட்டிலும் அவர் கலந்து கொள்கிறார்.
முதலில் அமெரிக்கா செல்லும் பிரதமர் அங்கு நான்கு நாட்கள் தங்கியிருப்பார். இதில் 2 நாட்கள் அணு பாதுகாப்பு மாநாடு நடைபெறுகிறது. இதில் 42 நாடுகளைச் சேர்ந்த தலைவர்கள் கலந்து கொள்கின்றனர்.
ஒபாமாவின் முயற்சியால் இந்த மாநாட்டுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதில், தீவிரவாதிகளின் கைகளுக்கு அணு ஆயுதங்கள் போகும் அபாயங்கள் குறித்தும், அணு பொருட்கள் கடத்தல் அதிகரித்து வருவது குறித்தும் விரிவாக விவாதிக்கப்படவுள்ளது. சில நாடுகளில் அணு ஆயுதங்கள் பாதுகாப்பற்ற நிலையில் இருப்பது குறித்தும் விவாதிக்கப்படவுள்ளது.
உலக அளவில் அணு நிலையங்களையும், அணுப் பொருட்களையும் பாதுகாப்பு குறித்தும் இந்தக் கூட்டத்தில் விவாதிக்கப்படவுள்ளது.
ஈரானின் அணு ஆயுதத் திட்டம் குறித்தும் விவாதிக்கப்படவுள்ளது.
அமெரிக்கப் பயணத்தின்போது அதிபர் ஒபாமா மற்றும் பல்வேறு உலகத் தலைவர்களை தனித் தனியாக சந்திக்கவும் பிரதமர் திட்டமிட்டுள்ளார்.
அமெரிக்க பயணத்தை முடித்துக் கொண்டு பிரேசில் செல்கிறார் பிரதமர்.
-
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ!












Click it and Unblock the Notifications