சென்னை வந்தாதர் பாஜக தலைவர் நிதின் கத்காரி
சென்னை: பாஜக தலைவராகப் பொறுப்பேற்ற பின்னர் முதல் முறையாக இன்று சென்னை க்கு வந்தார் பாஜக தலைவர் நிதின் கத்காரி.
சமீபத்தில் பாஜக தலைவராகப் பொறுப்பேற்றார் நிதின் கத்காரி. அதன் பின்னர் இன்று தனது முதல் தமிழக விஜயத்தை மேற்கொண்டார்.
இன்று முற்பகல் சென்னை வந்த கத்காரியை, விமான நிலையத்தில் தமிழக பாஜக தலைவர் பொன். ராதாகிருஷ்ணன், முன்னாள் தலைவர் இல.கணேசன் உள்ளிட்டோர் வரவேற்றனர்.
விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் கத்காரி பேசுகையில், சென்னைக்கு வந்திருப்பது மகிழ்ச்சி அளிப்பதாக கூறினார்.
பின்னர் அவர் பாஜக அலுவலகத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டார். இன்று மாலை மயிலை மாங்கொல்லையில் நடைபெறும் பாஜக பொதுக் கூட்டத்தில் கலந்து கொண்டு பேசுகிறார் கத்காரி. முன்னதாக ராயப்பேட்டை நெடுஞ்சாலையில் உள்ள திருவள்ளுவர் சிலைக்கு அவர் மாலை அணிவிக்கிறார்.
நாளை காலை முதல் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்கிறார் கத்காரி. காலை 8 மணிக்கு சேத்துப்பட்டில உள்ள ஆர்.எஸ்.எஸ். அலுவலகத்திற்குச் செல்கிறார். அங்கு நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்துகிறார்.
பின்னர் பாஜக தலைமையகமான கமலாலயத்திற்கு வரும் கத்காரி அங்கு மாவட்ட பாஜக தலைவர்கள் கூட்டத்தில் பேசுகிறார். பின்னர் பிற்பகலில் பத்திரிக்கையாளர்களைச் சந்திக்கிறார்.
இதையடுத்து மாலை 3 மணிக்கு பாஜக கிளைக் கமிட்டித் தலைவர்களை அண்ணா நகர் விஜயஸ்ரீ மஹாலில் சந்திக்கிறார்.
மாலை 4 மணிக்கு அயனாவரத்தில் அமைக்கப்பட்டுள்ள அம்பேத்கர் சிலைக்கு மாலை அணிவிக்கிறார். பின்னர் பேசுகிறார். அதன் பின்னர் 5 மணியளவில் ஸ்டான்லி அரசு மருத்துவமனை அருகில் உள்ள ஆஞ்சநேயர் தலித் குடிசைப் பகுதிக்குச் செல்லும் கத்காரி அங்கு குடியிருக்கும் தலிக் மக்களை சந்தித்துப் பேசுகிறார்.
-
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
மேகதாதுவில் அணை கட்ட தமிழகத்தின் அனுமதி தேவையில்லை.. கர்நாடக முதல்வரானதும் டிகே சிவக்குமார் பேச்சு -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
தமிழகம் முழுவதும் டாஸ்மாக் கடைகள், பார்களை தனியாரிடம் ஒப்படைக்க திட்டம்? விஜய் எடுக்க போகும் முடிவு? -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
டாஸ்மாக் தனியார் மயம் ஆகிறதா? மிகப்பெரிய சீர்திருத்தம் வரப்போகிறது.. அமைச்சர் விக்னேஷ் தகவல் -
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
திருச்செந்தூர் முருகனின் விஸ்வரூப தரிசனம்! அடுத்தடுத்து முதல்வர்களான விஜய், டி.கே.சிவக்குமார்! -
தவெக அரசின் முதல் பிரம்மாண்ட முதலீடு: எல் அண்ட் டி உடன் ₹18,600 கோடி ஒப்பந்தம்.. 8,200 வேலைவாய்ப்பு!












Click it and Unblock the Notifications