மேலவை கலைக்கப்பட நடிகைதான் காரணம்-பாமக
சென்னை: தமிழகத்தில் முன்பு மேலவை கலைக்கப்பட்டதற்கு ஒரு நடிகை தான் காரணம் என்று பாமக எம்எல்ஏ ஜி.கே.மணி கூறியதால் சட்டசபையில் அதிமுக, பாமக எம்எல்ஏக்கள் இடையே மோதல் ஏற்பட்டது.
மீண்டும் மேலவையைக் கொண்டு வருவது தொடர்பாக சட்டமன்றத்தில் இன்று தாக்கலான தீர்மானத்தின் மீது நடந்த விவாதத்தின்போது அதை ஆதரித்துப் பேசிய பாமக எம்எல்ஏ ஜி.கே.மணி, முன்பு மேலவை கலைக்கப்பட்டதற்கு ஒரு நடிகையும் காரணம் ஆவார் என்றார்.
இதற்கு அதிமுகவினர் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். கற்பனையான விஷயங்களை இங்கு பேசக் கூடாது என்று குரல் தந்தனர்.
இதற்கு பதிலளித்த ஜி.கே.மணி, பத்திரிக்கைகளில் வந்ததை வைத்துதான் சொன்னேன் என்றார்.
இதனால் ஜி.கே.மணிக்கும் அதிமுக எம்எல்ஏக்களுக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. மணிக்கு ஆதரவாக பாமக எம்எல்ஏக்கள் பேசியதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
அதிமுக எம்எல்ஏக்கள் சேகர்பாபு, ரவிச்சந்திரன், செ.ம.வேலுச்சாமி ஆகியோருக்கும் வேல்முருகன் உள்ளிட்ட பாமக எம்எல்ஏக்களுக்கும் இடையே கடும் வாக்குவாதம் நடந்தது.
இதையடுத்து சபாநாயகர் ஆவுடையப்பன் இரு தரப்பினரையும் அமைதிப்படுத்தினார்.
கூட்டணிக்கு அதிமுக அலைவது ஏன்?:
முன்னதாக தீர்மானத்தை ஆதரித்து காங்கிரஸ் எம்எல்ஏ பீட்டர் அல்போன்ஸ் பேசிக் கொண்டிருந்தபோது அதிமுக எம்எல்ஏக்கள் குறுக்கிட்டு அவருக்கு எதிராக கருத்துத் தெரிவித்தனர்.
அப்போது பீட்டர் அல்போன்ஸ், எனக்கும் பேசத் தெரியும். நீங்கள் எதுவும் சொல்லித் தர வேண்டாம். இதனால்தான் நீங்கள் டெபாசிட் இழந்தீர்கள் என்றார்.
இதற்கு பதிலளித்த அதிமுக எம்எல்ஏ செங்கோட்டையன், காங்கிரஸ் எத்தனை தடவை டெபாசிட் இழந்துள்ளது. உங்களால் தேர்தலில் தனித்து நிற்க முடிகிறதா? யார் முதுகிலாவது ஏறித்தானே பவனி வருகிறீர்கள் என்றார்.
அப்போது குறுக்கிட்ட காங்கிரஸ் எம்எல்ஏ சுதர்சனம், காங்கிரஸ் டெபாசிட் இழந்ததாக கூறுகிறீர்களே. அப்படியானால் ஏன் காங்கிரசுடன் கூட்டணி வைத்துக் கொள்ள துடிக்கிறீர்கள் என்றார்.
இதனால் அதிமுக, காங்கிரஸ் எம்எல்ஏக்கள் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ்












Click it and Unblock the Notifications