பெங்களூர் ரெசிடென்சி சாலை ஹோட்டலில் தீ
Subscribe to Oneindia Tamil
பெங்களூர்: பெங்களூர் ரெசிடென்சி சாலையில் உள்ள ஒரு ஹோட்டலில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டது.
இந்தச் சாலையில் உள்ள கோனார்க் ஹோட்டலில் இன்று பிற்பகலில் தீப் பிடித்துக் கொண்டது.
14 தீயணைப்பு வண்டிகள் அங்கு விரைந்து தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளன.
தீ தற்போது கட்டுக்கள் இருப்பதாக போலீஸார் தெரிவித்துள்ளனர். இதில் எந்தவித உயிர்ப்பலியும் ஏற்பட்டதாக தெரியவில்லை.
ஹோட்டலின் ஐந்தாவது தளத்தில் உள்ள பப்பில் தீவிபத்து ஏற்பட்டதாக போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த பிப்ரவரி மாதம் தொம்ளூர் பகுதியில் கார்ல்டன் டவர் அடுக்கு மாடி வர்த்தக வளாகத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் 9 பேர் பலியானது நினைவுகூறத்தக்கது.












Click it and Unblock the Notifications