சாமியார் கிளப்பிய வெடிகுண்டு பீதி - அவசரமாக தரையிறங்கிய விமானம்
வாரனாசி: குண்டு வெடிக்கும் என சாமியார் கிளப்பிய பீதியால் ஜெட் ஏர்வேஸ் விமானம் அவசரமாக தரையிறக்கப்பட்டது.
டெல்லியில் இருந்து வாரனாசி- கஜூரோஹோ செல்லும் ஜெட் ஏர்வேஸின் 737-9w723 விமானம் நேற்று டெல்லி விமான நிலையத்தில் புறப்பட்டது.
114 பயணிகளுடன் இந்த விமானம் கஜூராஹோ நோக்கி புறப்பட்டது. விமானத்தில் விஆர்கே சிங் என்ற சாமியார் பயணம் செய்துகொண்டிருந்தார்.
52 வயதான விஆர்கே சிங் பெரிய தாடி, சடா முடியுடன் காவி உடையுடன் இருந்தார்.
அப்போது பக்கத்தில் உட்கார்ந்திருந்த வெளிநாட்டு தம்பதிகளுடன் சாமியார் வாக்குவாதத்தில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது.
'சலசலவென பேசாமல் அமைதியாக இருங்கள். இல்லை என்றால் 'குண்டு' வெடித்துவிடும்' என ஒருகட்டத்தில் கூறியுள்ளார்.
இதைக்கேட்டு அதிர்ச்சி அடைந்த வெளிநாட்டு தம்பதி விமான ஊழியர்களிடம் பதற்றத்தோடு புகார் தெரிவித்துவிட்டனர்.
உடனடியாக விமானம் வாரனாசியில் தரையிறக்கப்பட்டு கடும் சோதனைகள் மேற்கொள்ளப்பட்டன.
இரண்டு மணி நேரத்துக்கும் மேலாக சோதனை நடந்தது.
சாமியாரிடம் பாதுகாப்பு அதிகாரிகள் விசாரித்த போது, 'அமைதியாக இருங்கள் என்று தான் சொன்னேன். வெடிகுண்டு பற்றி எதுவும் கூறவில்லை' என்றிருக்கிறார்.
பின்னர், வெடிகுண்டு எதுவும் விமானத்தில் இல்லை என்பது உறுதி செய்யப்பட்டு, நான்கு மணி நேரம் தாமதமாக ஜெட் ஏர்வேஸ் விமானம் கஜூராஹோ புறப்பட்டு சென்றது.
-
டாஸ்மாக்கில் ரூ.3,600 கோடி ஊழல்.. லிஸ்ட் எடுத்த தவெக.. அமைச்சர் விக்னேஷ் திடுக் தகவல் -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தலை எதிர்கொள்ள திமுகவின் இரட்டை வியூகம்.. இள ரத்தத்திற்கு முக்கியத்துவம்! -
96,000 வாக்குகள் வித்தியாசத்தில்.. தவெக வேட்பாளரை ஜெயிக்க வைத்த தொகுதிக்கு இந்த நிலைமையா? -
இந்தியாவை தாக்கும் பெரிய ஆபத்து.. விஷயம் கேட்டு எலான் மஸ்க் கூட அதிர்ந்து போனார்! பேரழிவு கன்பார்ம்? -
அதிகாலையே கணக்கில் வரவு வைக்கப்பட்ட ரூ.3000.. வந்தது மே மாதம் பேமெண்ட்.. அரசின் அசத்தல் மூவ்! -
சொத்துகளை மறைக்கும் சென்னை மேயர் பிரியா.. துணை மேயர் உள்பட 75% கவுன்சிலர்கள் 4 ஆண்டுகளாக ‘டிமிக்கி' -
அதிமுக + திமுகவிற்கு ஷாக்.. 4 மாஜி அமைச்சர்கள் - 8 எம்எல்ஏக்கள் உள்பட 60 பேர் தவெகவில் ஐக்கியம் -
அடித்து ஆடும் விஜய்.. வருகிறது ராமநாதபுரம் புதிய விமான நிலையம்.. பொருளாதார புரட்சிக்கு அடித்தளம்! -
ரஷ்யா வச்ச ஆப்பு.. தள்ளுபடிலாம் தர முடியாது.. பிரீமியம் கட்டணம்! கச்சா எண்ணெய்க்கு 425% கூடுதல் தொகை -
ரூ.15 லட்சம் கோடி பஸ்பம் ஆகும்? சரிகிறது இந்தியாவின் தங்க’ சாம்ராஜ்யம்.. நாட்டையே உலுக்கும் சம்பவம் -
"அண்ணாமலை வந்ததால் பாஜக ஒன்னும் பலமாகவில்லை".. ஒரு இதழை கூட அசைக்க முடியாது.. தமிழிசை ‘அட்டாக்' -
நாங்க தோத்துட்டோம்.. ஆனா சாகலை! விஜய்க்கு ஏதாவது ஆச்சுனா கம்பெனி பொறுப்பில்லை! மாஜி கொடுத்த வார்னிங்












Click it and Unblock the Notifications