மே 29 வரை விசை படகுகளுக்கு தடை: தமிழகத்தில் மீன் விலை உயரும்
சென்னை: நாளை இரவு முதல் 45 நாட்களுக்கு கடலில் மீன் பிடிக்க விசைப் படகுகளுக்கு தடை அமலாவதால் தமிழகத்தில் மீன் விலை மிகக் கடுமையாக உயரவுள்ளது.
ஆண்டுதோறும் ஏப்ரல் 15ம் தேதி முதல் மே 29ம் தேதி வரை, 45 நாட்கள் மீன்களின் இனப்பெருக்க காலம் என்பதால் கடந்த 12 ஆண்டுகளாக இந்த நாட்களில், ஆழ்கடலில் மீன்பிடிக்க தடை விதிக்கப்பட்டு வருகிறது.
இந்த காலக்கட்டத்தில் ஆழ்கடலில் மீன்பிடிக்க விசை படகுகளுக்கு அனுமதி இல்லை. கடலில் குறைந்த தூரம் சென்று மீன் பிடிக்கும் பைபர் மற்றும் கட்டுமரங்களுக்கு மட்டுமே அனுமதி வழங்கப்படும்.
இந்த ஆண்டு மீன்பிடி தடை நாளை (புதன்கிழமை) இரவு முதல் அமலுக்கு வருகிறது. இதனால் மே மாதம் 29ம் தேதி வரை தமிழகத்தில் சுமார் 10,000 விசை படகுகள் கடலுக்குள் செல்லாது.
இதனால் தமிழகத்தில் மீன் வரத்து 85 சதவீதம் குறையவுள்ளத. இதனால், மீன் விலை மிகக் கடுமையாக உயரவுள்ளது.
கடந்த ஆண்டு இந்த காலகட்டத்தில் மீன் விலை 40 சதவீதம் வரை உயர்ந்தது குறிப்பிடத்தக்கது.
தமிழகத்தின் மீன் தேவையை சமாளிக்க கேரளா, கர்நாடகா, மகாராஷ்டிரா ஆகிய மாநிலங்களில் இருந்து மீன்கள் வரவழைக்கப்படவுள்ளன.
மீன்பிடி தடை காலத்தில், தமிழக விசை படகு மீனவர்களுக்கு நாள் ஒன்றுக்கு ரூ.5 கோடி வரை இழப்பு ஏற்படும் என்று தெரிகிறது.
இதுகுறித்து அகில இந்திய மீனவர் சங்க செய்தி தொடர்பாளர் நாஞ்சில் ரவி கூறுகையில், கடந்த ஆண்டு தமிழக அரசு சார்பில் மீன்பிடி தடை காலத்தில் ரூ.500 நிவாரண உதவி வழங்கப்பட்டது. அதுவும் மீனவ குடும்பத்தில் ஒருவருக்குத்தான் கொடுக்கப்பட்டது. புதுச்சேரியில் இந்த ஆண்டு மீனவர்களுக்கு ரூ.2,700 நிவாரண உதவி வழங்கப்படும் என்று அறிவித்துள்ளனர். அதுபோல், தமிழகத்திலும் நிவாரண உதவியை உயர்த்தி வழங்க வேண்டும் என்றார்.
-
பாஜகவுக்கு ஆதரவு தரும் திமுக? டெல்லியை அதிர வைக்க போகும் மாற்றம்.. ரெடியாகும் மாஸ்டர் பிளான் -
வெளிநாடு போயிருக்கதே 'ரீல்ஸ்' பார்த்துதான் தெரியுது.. அமைச்சர் கீர்த்தனாவை கலாய்த்த மேயர் பிரியா! -
வெளிப்படையாக வார்னிங் கொடுத்த விஜய்.. சிங்கப்பெண் நிகழ்ச்சியில் நடந்த முக்கிய விஷயம்! -
விஜய் - மோடி சந்திப்புக்கு பின்பு நடந்த முக்கிய மாற்றம்! தரமான செயல்..! #தமிழ்த்தாய்வாழ்த்து -
HDFC வங்கியால் கடன் வாங்கிய அனைவருக்கும் ஷாக்.. உங்க EMI அதிகரிக்க போகிறது? -
கடைசியில் ட்விஸ்ட்.. பாஜக சொன்ன பாயிண்டு! காங்கிரஸ் வேட்பாளர் மீனாட்சி நடராஜன் வேட்புமனு நிராகரிப்பு -
வெளிநாட்டு வாழ் இந்தியர்களுக்கு NRI ஜாக்பாட்! கையில் டாலர் இருந்தா போதும், RBI கொடுத்த மெகா சலுகை! -
தலைவரை நீக்குங்க.. விஜய் வென்றதும் வாட்ஸ் ஆப்பில் பறந்த மெசேஜ்! ரெடியாகும் தங்க நகை.. என்ன நடக்குது? -
41 வயது பெண் கூட்டு பலாத்காரம்.. வலைதள வீடியோவால் சிக்கிய 10 பேர் கும்பல்.. கர்நாடகாவில் கொடூரம் -
எலான் மஸ்க்-ன் 'SpaceX' ஐபிஓ.. இந்திய முதலீட்டாளர்களுக்கு காத்திருக்கும் அரிய வாய்ப்பு! -
"அந்த" 14 கையெழுத்தால் வந்த சிக்கல்.. மம்தா வீட்டில் சிஐடி அதிரடி சோதனை.. மேற்கு வங்கத்தில் பதற்றம் -
தமிழ்நாட்டில் 6 ஐஏஎஸ் அதிகாரிகள் இடமாற்றம்.. தமிழக அரசு அதிரடி உத்தரவு!












Click it and Unblock the Notifications