சென்னை, மதுரை, கோவையில் ஊழல் வழக்குகளுக்கு தனி கோர்ட் – துரைமுருகன்
சென்னை: ஊழல் வழக்குகளை விசாரிக்க சென்னை, மதுரை, கோவை, திருச்சியில் தனி கோர்ட்கள் அமைக்கப்படும் என்று சட்டத்துறை அமைச்சர் துரைமுருகன் கூறியுள்ளார்.
சட்டசபையில் இன்று சட்டத்துறை மானியக் கோரிக்கை மீதான விவாதத்திற்கு துரைமுருகன் பதிலளித்துப் பேசினார்.
அப்போது அவர் கூறுகையில், ஊழல் வழக்குகளை விரைவாக விசாரிக்க தனி கோர்ட்கள் அமைக்கப்படும். சென்னை, மதுரை, கோவை, திருச்சியில் இவை அமைக்கப்படும்.
நாகர்கோவில், செஞ்சி, வால்பாறை, ஓமலூர் ஆகிய நகரங்களில் ஒருங்கிணைந்த கோர்ட் வளாகம் அமைக்கப்படும்.
செங்கல்பட்டு அரசு சட்டக்கல்லூரி மாணவர்களுக்கு நடப்பாண்டில் ரூ.1 கோடி செலவில் விடுதி கட்டிடம் கட்ட அனுமதிக்கப்படும். அரசு சட்டக்கல்லூரிகளில் காலியாக உள்ள ஆசிரியர் பணியிடங்களை பூர்த்தி செய்யவும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
சென்னை அரசு சட்டக்கல்லூரியை சேர்ந்த 7 மாணவர்கள் ஆஸ்திரியாவில் உள்ள வியன்னாவில் நடைபெறும் கோர்ட்டு போட்டிகளில் கலந்து கொள்ள ரூ. 5 1/2 லட்சம் ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாட்டில் மொத்தம் 134 சிறைச்சாலை உள்ளது. இதில் மத்திய சிறைசாலை 9. பெண்களுக்கான தனி சிறைகள் 3 உள்ளன.
மாவட்ட சிறைகள்-6, ஆண்களுக்கான கிளைச்சிறைகள்-88, பெண்களுக்கான கிளை சிறைகள்-9, ஆண்களுக்கான தனி சிறைச்சாலைகள்-2, இளம் குற்றவாளிகள் சீர்திருத்தப்பள்ளிகள்-12, திறந்தவெளி சிறைகள் 2-ம் உள்ளன.
போலீஸ் கூடுதல் டி.ஜி.பி. தரத்தில் உள்ள முதுநிலை போலீஸ் அதிகாரி ஒருவரின் தலைமையின் கீழ் இத்துறை இயங்குகிறது.
சிறைத்துறை பணியாளர்களின் எண்ணிக்கை- 4931.
தமிழ்நாட்டில் உள்ள அனைத்து சிறைகளிலும் மொத்தம் 20,939 பேர்களை அடைக்க முடியும். 2009-2010-ம் ஆண்டில் மொத்தம் 1687 தண்டனை கைதிகள் பல்வேறு படிப்புகளை படித்து வருகிறார்கள்.
அடிப்படை பயிற்சி- 1377, கம்ப்யூட்டர் படிப்பு- 3, முதுகலை பட்டம்- 10,
இளங்கலை பட்டம்- 134, இளம் அறிவியல் பட்டம்- 3, தொழில் நிர்வாக பட்ட படிப்பு- 8, காம்ப்யூட்டர் பயன்பாட்டில் பட்ட படிப்பு- 15, உணவு- ஊட்டச்சத்து படிப்பு- 28, பட்டயப்படிப்பு- 109 ஆக மொத்தம்- 1687 பேர் படிக்கிறார்கள் என்றார் துரைமுருகன்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ்












Click it and Unblock the Notifications