தமிழகத்துக்கு 300 மெகாவாட் மின்சார வினியோகம்: உறுதி செய்தது நீதிமன்றம்
சென்னை: தமிழகத்துக்கு 300 மெகாவாட் மின்சார விநியோகத்தை ஜேஎஸ்டபிள்யூ நிறுவனம் தடையில்லாமல் வழங்க வேண்டும் என்று சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
தில்லியைச் சேர்ந்த ஜேஎஸ்டபிள்யூ என்ற தனியார் மின் விற்பனை நிறுவனத்துடன் ஏப்ரல், மே மாதங்களில் 300 மெகாவாட் மின்சாரம் பெற தமிழ்நாடு மின்சார வாரியம் ஒப்பந்தம் போட்டது.
அதன்படி, ஏப்ரல் மற்றும் மே மாதங்களுக்கு தலா 300 மெகாவாட் மின்சாரத்தை யூனிட் ஒன்றுக்கு ரூ.5.24 என்ற விலையில் பெற ஒப்புதல் அளிக்கப்பட்டது.
கர்நாடக மாநிலத்தில் உள்ள மின் உற்பத்தி நிலையத்தில் இருந்து மின்சாரம் விநியோகிக்கப்பட்டு வந்தது.
இந்த நிலையில், தங்களது மாநிலத்தில் கடுமையான மின் பற்றாக்குறை நிலவுவதாகவும், எனவே அங்கு உற்பத்தி செய்யப்படும் மின்சாரத்தை கர்நாடக மாநிலத்துக்கே விற்பனை செய்ய வேண்டும் என்றும் கர்நாடக மின் விநியோக நிறுவனம் ஜேஎஸ்டபிள்யூ நிறுவனத்துக்கு ஏப்ரல் 3ம் தேதி உத்தரவிட்டது.
பெங்களூரில் உள்ள தென் மண்டல மின் விநியோக நிறுவனம் இதுதொடர்பாக தமிழ்நாடு மின் வாரியத்துக்கு ஏப்ரல் 6ம் தேதி தகவல் அனுப்பியது.
அதில், ஏற்கனவே உறுதியளித்தவாறு தமிழகத்துக்கு ஏப்ரல் 9ம் தேதி முதல் மே 31ம் தேதி வரை மின்சாரத்தை வழங்க முடியாது என்று தெரிவிக்கப்பட்டது.
இதைஎதிர்த்து சென்னை உயர் நீதிமன்றத்தில் மின் வாரியம் வழக்குத் தொடர்ந்தது. தென் மண்டல மின் பகிர்வு நிலையத்தின் உத்தரவுக்கு உயர் நீதிமன்றம் ஏப்ரல் 7ம் தேதி இடைக்காலத் தடை விதித்தது.
இந்த நிலையில், ஏப்ரல் 8ம் தேதி நள்ளிரவு முதல் தமிழகத்துக்கான மின் விநியோகம் நிறுத்தப்பட்டது.
தென் மண்டல மின் பகிர்வு நிலையத்தின் பொதுமேலாளர் ரகுராமன், ஜேஎஸ்டபிள்யூ மின்சார விற்பனை நிறுவனத்தைச் சேர்ந்த எஸ்.எஸ்.ராவ் ஆகியோர் மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்குத் தொடரப்பட்டது.
நீதிபதி கே.என்.பாஷா முன்னிலையில் இந்த வழக்கு நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது, தமிழ்நாட்டுக்கு 300 மெகாவாட் மின்சாரத்தை ஒப்பந்தப்படி தொடர்ந்து விநியோகிக்க அனுமதி அளிக்கக் கோரி ஜேஎஸ்டபிள்யூ நிறுவனத்தின் சார்பில் கடிதம் எழுதப்பட்டுள்ளதாக நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது.
மனுவை விசாரித்த நீதிபதி, 'ஜேஎஸ்டபிள்யூ நிறுவனம் எழுதியுள்ள கடிதத்தின் அடிப்படையில், தமிழகத்துக்கான மின்சார விநியோகத்தை தாமதமின்றி தொடர்ந்து வழங்க தென் மண்டல மின் பகிர்வு நிலையம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
தமிழ்நாடு மின்சார வாரியம் இதுதொடர்பாக தொடர்ந்த வழக்கு நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது.
நிவாரணம் தேவைப்பட்டால், சம்பந்தப்பட்ட நிறுவனங்கள் சென்னை உயர் நீதிமன்றத்தை அணுகலாம்' என்று நீதிபதி தெரிவித்துள்ளார்.
-
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின்












Click it and Unblock the Notifications