வெயில்.. வெளிநாடுகளுக்கு ஓடும் மத்திய அமைச்சர்கள்!

மத்திய அமைச்சரவையில் உள்ள கேபினட் அமைச்சர்களில் 3ல் ஒரு பங்கு அமைச்சர்கள் வெளிநாடுகளுக்குப் பயணத்துக் கொண்டுள்ளனர் அல்லது பயணித்துவிட்டு வந்துள்ளனர்.
விவசாயத்துறை அமைச்சர் சரத் பவார் மாஸ்கோவுக்குப் போய்விட்டார்.
உள்துறை அமைச்சர் ப.சிதம்பரம் லண்டனில் தங்கியிருந்துவிட்டுத் திரும்பியுள்ளார்.
வெளியுறவு அமைச்சர் எஸ்.எம்.கிருஷ்ணா சீனாவில் சுற்றுப் பயணம் மேற்கொண்டார்.
மனித வளத்துறை அமைச்சர் கபில் சிபல் ஆஸ்திரேலியா, சிங்கப்பூரில் 11 நாட்கள் டேரா போட்டுவிட்டு வந்துள்ளார்.
நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் கமல் நாத் அமெரிககாவில் தங்கிவிட்டு வந்துள்ளார்.
வர்த்தகத்துறை அமைச்சர் ஆனந்த் சர்மா தனக்கு மிகப் பிடித்த பின்லாந்து நாட்டிலும் அமெரிக்காவிலும் சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ளார்.
பெட்ரோலியத்துறை அமைச்சர் முரளி தியோரா மெக்சிகோவில் சுற்றிவிட்டு வந்துள்ளார்.
சுற்றுலாத்துறை அமைச்சர் குமாரி செல்ஜா மெக்சிகோ, பெரு, தென் ஆப்பிரிக்கா, ஈரான் என்று ஒரு மாதமாக பெரும் சுற்றுலாவில் இருக்கிறார்.
நம் ஊரைச் சேர்ந்த ரசாயனத்துறை அமைச்சர் மு.க.அழகரியும் நியூசிலாந்து, ஆஸ்திரேலியா, சிங்கப்பூர் என 11 நாள் டூர் அடித்துவிட்டு வந்ததும் குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications