எனது தனிப்பட்ட வாழ்க்கைக்குள் நுழையாதீர்கள் – சுனந்தா புஷ்கர்
டெல்லி: எனது தொழில்முறை அனுபவங்களைப் பார்க்காமல் தனிப்பட்ட வாழ்க்கையை மட்டும் மீடியாக்கள் அலசுவது மிகவும் வேதனையாக இருக்கிறது என்று கூறியுள்ளார் சுனந்தா புஷ்கர்.
மத்திய வெளியுறவு இணை அமைச்சர் சசி தரூரின் காதலி சுனந்தா புஷ்கர், ஐபிஎல் கொச்சி சர்ச்சையில் சிக்கி மீடியாவின் வெளிச்சத்தில் சிக்கியுள்ளார்.
இந்த நிலையில் மீடியாக்களில் தனது தனிப்பட்ட வாழ்க்கை குறித்து பெருமளவில் செய்திகள் வெளியாவது குறித்து அதிருப்தியும், விரக்தியும் வெளியிட்டுள்ளார் சுனந்தா.
இதுகுறித்து அவர் கூறுகையில், ஒரு பெண் நிர்வாக ரீதியாகவும், தொழில்முறை ரீதியிலும் வெற்றியாளராக திகழ முடியாதா. அப்படி திகழும் என்னுடைய திறமையைப் பற்றி செய்தி வெளியிடாமல், எனது தனிப்பட்ட வாழ்க்கை குறித்து செய்திகள் வெளியிடுவதில் மீடியாக்கள் ஆர்வம் காட்டுவது வேதனையாக இருக்கிறது.
என்னை தரூரின் பினாமி போல சித்தரிப்பது வருத்தமாக இருக்கிறது. நான் தரூரின் பினாமி அல்ல. நித நிர்வாகத்தில் எனது திறமையை அறிந்த ரெண்டஸ்வஸ் நிறுவனம், எனது தொழில் திறமையைப் பயன்படுத்திக் கொள்ளும் வகையில், தங்களது நிருவனத்தின் செயல்பாடுகளில் ஈடுபட வருமாறு என்னை அழைத்தது.
ஆனால் என்னை தரூரின் பினாமி என்றும், மோசடியாக சித்தரித்தும் என்னை அவமானப்படுத்தி வருகிறது மீடியா. தரூருடனும் என்னை மோசமாக இணைத்து அவமானப்படுத்தி வருகின்றனர்.
கணவரை இழந்து, ஒரு குழந்தையுடன் மரியாதைக்குரிய வாழ்க்கையை வாழ்ந்து வருகிறேன். ஆனால் என்னை கேலிக்குரிய பொருளாக மீடியாக்கள் மாற்றி விட்டன. தவறான செய்திகளை தொடர்ந்து பிரசுரித்து வருகின்றன.
தற்போதைய சர்ச்சையில் என்னை யாரும் இழுக்க வேண்டாம் என்று கேட்டுக் கொள்கிறேன் என்றார் சுனந்தா.
இதற்கிடையே, சுனந்தாவின் தந்தை தாஸ் கூறுகையில், எனது மகள் கடந்த காலத்தில் மிகவும் சிரமப்பட்டு விட்டாள். இப்போதுதான் மீண்டு வந்து 15 வயது மகனுடன் நிம்மதியாக வாழ்ந்து வருகிறாள். அவரைப் பற்றி தேவையில்லாத செய்திகளை வெளியிட்டு அவரது வாழ்க்கையை சோகமாக்கி விட வேண்டாம் என்று மீடியாக்களை கேட்டுக் கொள்கிறேன் என்றார் தாஸ்.
சுனந்தா ஏற்கனவே இருமுறை திருமணமானவர். முதல் கணவரான சஞ்சய் ரெய்னாவை மணந்த பின்னர் விவாகரத்து செய்தார். பின்னர் துபாயைச் சேர்ந்த ஒரு தொழிலதிபரை மணந்தார். அவர் மூலம் ஒரு பையன் உண்டு. அந்த வர்த்தகர் விபத்தில் உயிரிழந்தார்.
இதையடுத்து தனது பெற்றோருடன் காஷ்மீரில் வசித்து வருகிறார் சுனந்தா என்பது குறிப்பிடத்தக்து.
சுனந்தா புஷ்கர், முதலில் ஹோட்டல் பணியாளர் சஞ்சய் ரெய்னாவை திருமணம் செய்து கொண்டார். பின்னர் அவரை விவாகரத்து செய்துவிட்டு துபையைச் சேர்ந்த வர்த்தகர் ஒருவரை திருமணம் செய்து கொண்டார். அவர் சாலை விபத்தில் உயிரிழந்தார். தற்போது இவர் மகனுடன் பெற்றோருடன் ஜம்மு காஷ்மீரில் வசிக்கிறார்.
-
ஆர்சிபி வெற்றிக்கு 5 காரணங்கள்.. கார்த்திக் "அண்ணன்" பங்களிப்பை மறுக்க முடியுமா? -
"தல" தோனி, ரோஹித் வரிசையில் படிதார்.. சாம்பியன்ஷிப்பை விட பெரிய சாதனை படைத்த ஆர்சிபி.. கலக்கல் -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல்












Click it and Unblock the Notifications