சியால்கோட் வர சானியாவுக்கு விசா தர பாக் மறுப்பு- லாகூரில் வரவேற்பு

சானியா மிர்ஸாவுக்கும், சோயப் மாலிக்குக்கும் ஹைதராபாத்தில் 12ம் தேதி திருமணம் நடந்தது. இன்று இரவு ஹைதராபாத்தில் இருவரது திருமண வரவேற்பு நிகழ்ச்சி நடைபெறுகிறது.
இதை முடித்துக் கொண்டு சானியா – சோயப் ஜோடி பாகிஸ்தான் கிளம்புகிறது.
சோயப்பின் சொந்த ஊர் சியால்கோட் ஆகும். எனவே அங்கேயே வரவேற்பை நடத்த சோயப் குடும்பத்தினர் திட்டமிட்டனர். ஆனால் சானியாவுக்கு சியோல்காட் வர பாகிஸ்தான் தூதரகம் விசா மறுத்து விட்டது.
லாகூர் மற்றும் கராச்சி வருவதற்கு மட்டுமே சானியாவுக்கு விசா கொடுத்துள்ளனர். இதையடுத்து லாகூருக்கு திருமண வரவேற்பை சோயப் குடும்பத்தினர் மாற்றியுள்ளனர்.
லாகூரில் உள்ள பிரபல பியர்ல் கான்டினென்டல் ஹோட்டலில் வரவேற்பு நிகழ்ச்சிக்க ஏற்பாடு செய்துள்ளது.
விருந்துக்கு 500 பேர் அழைக்கப்பட்டுள்ளனர். விருந்துக்காக அசைவம் மற்றும் சைவம் என இரு பிரிவில் ஆர்டர் கொடுத்தனராம் சோயப் குடும்பத்தினர். ஆனால் அதை ஏற்க ஹோட்டல் நிர்வாகம் மறுத்துள்ளது.
திருமணம், வரவேற்பு போன்ற நிகழ்ச்சிகளின்போது ஏதாவது ஒரு வகை உணவு மட்டுமே வழங்கப்பட வேண்டும் என்பது பஞ்சாப் மாகாண அரசின் உத்தரவாம். இதைக் காரணம் காட்டி சைவம் அல்லது அசைவம் மட்டுமே ஏற்கப்படும் என ஹோட்டல் நிர்வாகம் கூறியுள்ளதாம்.
ஒரு வேளை மாநில அரசிடம் சிறப்பு அனுமதி பெற்றால் இரண்டு வகை உணவை தருவதாக ஹோட்டல் நிர்வாகம் கூறியுள்ளதாம்.
-
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது!












Click it and Unblock the Notifications