கோவையில் தொழிற்சங்க விவகாரம் - வைகோ உண்ணாவிரத போராட்டம்
கோவை: தொழிற்சங்கத்தை கைப்பற்றியதை கண்டித்து கோவையில் மதிமுக பொதுச் செயலாளர் வைகோ தலைமையில் இன்று நடந்த உண்ணாவிரதப் போராட்டத்தில் ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டனர்.
கோவை மாவட்ட திராவிட பஞ்சாலை தொழிலாளர் முன்னேற்ற சங்கம் 1958ம் ஆண்டு தொடங்கப்பட்டது. சு.துரைசாமி இதற்கு தலைவராக இருந்தார்.
கடந்த 1972ம் ஆண்டு கோவை டாடாபாத் மூன்றாம் வீதியில் தற்போதைய தொழிற்சங்க கட்டிடம் வாங்கப்பட்டு தலைமை சங்க அலுவலகமாக தொடர்ந்து செயல்பட்டு வந்தது.
இதையடுத்து 1994ம் ஆண்டு மதிமுக தொடங்கப்பட்ட போது மறுமலர்ச்சி தொழிலாளர் முன்னணியுடன் இணைக்கப்பட்டு தொழிலாளர்களுக்காக தொடர்ந்து இயங்கி வந்தது.
இந்த சங்கத்திற்கு உரிமை கொண்டாடி திமுகவை சேர்ந்த எல்பிஎப் சங்கத்தினர் 1994ம் ஆண்டு கோவை மாவட்ட உரிமையியல் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர்.
வழக்கில் சு.துரைசாமி தலைமையிலான சங்கத்திற்கே சாதகமான தீர்ப்பு வழங்கப்பட்டது.
இந்த தீர்ப்பை எதிர்த்து எல்.பி.எப். சங்கத்தை சேர்ந்தவர்கள் கோவை மாவட்ட நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்தார்கள்.
அந்த வழக்கிலும் சு.துரைசாமி தலைமையிலான சங்கத்திற்கே சாதகமான தீர்ப்பு வழங்கப்பட்டது. இந்த சூழ்நிலையில் எல்.பி.எப். சங்கத்தினரும், தி.மு.க.வினரும் அத்துமீறி உள்ளே நுழைந்து சங்கத்தை கைப்பற்றி உள்ளனர்.
இதை கண்டித்து கோவை காந்திபுரம் மத்திய பஸ் நிலையம் முன்பு மதிமுக பொதுச் செயலாளர் வைகோ தலைமையில் இன்று உண்ணாவிரத போராட்டம் நடத்தினர்.
உண்ணாவிரத போராட்டத்தில் மாநில, மாவட்ட நிர்வாகிகள், பகுதி, ஒன்றிய, நகர செயலாளர்கள், நிர்வாகிகள், தலைமை செயற்குழு, பொதுக்குழு உறுப்பினர்கள், கிளை கழக செயலாளர்கள் உள்பட பலரும் கலந்துகொண்டனர்.
-
"10 வயது குழந்தையை கொன்னுட்டீயே.." கோவை சூலூர் சிறுமி கொலை வழக்கு குற்றவாளியை தாக்கிய சக கைதிகள்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள்












Click it and Unblock the Notifications