ஐபிஎல் கொச்சி சர்ச்சை- லலித் மோடியின் அதிகாரத்தைக் குறைக்க பிசிசிஐ முடிவு
டெல்லி: லலித் மோடியால் பெரும் சர்ச்சை ஏற்பட்டுள்ளதால் அவரை டம்மியாக்கும் வகையில், அதிகாரங்களைக் குறைக்க இந்திய கிரிக்கெட் வாரியம் முடிவு செய்துள்ளதாக தெரிகிறது. கிரிக்கெட் வாரியத் தலைவர் சஷாங்க் மனோகர் ஐபிஎல்லின் இணை ஆணையராகப் பணியாற்றப் போவதாக தகவல்கள் கூறுகின்றன.
இந்திய கிரிக்கெட் வாரியத்தால் உருவாக்கப்பட்டதுதான் ஐபிஎல் எனப்படும் இந்தியன் பிரிமீயர் லீக். இதன் ஆணையராக நியமிக்கப்பட்டவர் மோடி. தற்போது ஐபிஎல் கொச்சி பிரச்சினையில் மோடியின் தலை உருளுகிறது.
இது போதாதென்று ஐபிஎல் வர்த்தகத்தில் மோடியின் உறவினர்களின் ஆதிக்கமும் இருப்பதாக பெரும் புகார்கள் எழுந்துள்ளன. இதனால் மோடி விவகாரத்தில் இந்திய கிரிக்கெட் வாரியம் நடவடிக்கை எடுத்தாக வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளது.
மோடியிடம் குவிந்து கிடக்கும் அதிகாரங்களைக் குறைக்கும் வகையில், அவருக்கு ஒரு செக் வைக்கும் வகையில், ஐபிஎல்லின் இணை ஆணையராக கிரிக்கெட் வாரியத் தலைவர் மனோகர் செயல்படவுள்ளார்.
வருகிற 24ம் தேதி கிரிக்கெட வாரிய செயல் குழுக் கூட்டம் நடக்கிறது. அப்போது இதுகுறித்து விவாதிக்கப்படவுள்ளது.
ஐபிஎல் தலைமை அலுவலகத்தில் நடந்த வருமான வரிச் சோதனையால் கிரிக்கெட் வாரியம் அதிர்ச்சி அடைந்துள்ளது. மோடியின் செயல்பாடுகளால்தான் இந்த நிலை ஏற்பட்டதாகவும் அது கருதுகிறது. மேலும் சசி தரூருக்கும், மோடிக்கும் இடையிலான மோதலும் கிரிக்கெட் வாரியத்தை அப்செட் ஆக்கியுள்ளது.
கிரிக்கெட் வாரிய செயல் குழுவில் உள்ளவர்களில் ஐ.எஸ்.பிந்த்ராவைத் தவிர மற்ற அனைவருமே மோடிக்கு எதிராக திரண்டுள்ளனராம்.
இதையடுத்து ஐபிஎல் அலங்கோலத்தை சரி செய்ய களத்தல் குதிக்கிறது கிரிக்கெட் வாரியம். மேலும் எதிர்காலத்தில் அணிகளின் ஏல விவகாரத்தில் எந்தவிக்க் குழப்பமும் ஏற்படாத வகையில் பல்வேறு வெளிப்படையான நடவடிக்கைகளை கடைப்பிடிக்கவும் கிரிக்கெட் வாரியம் தீர்மானித்துள்ளதாம்.
முன்னதாக ட்விட்டரில் ஐபிஎல் கொச்சி அணியின் பங்குதாரர்கள் குறித்த விவரங்களை மோடி வெளியிட்டதற்குக் கண்டனம் தெரிவித்த மனோகர் ஒரு கடிதம் அனுப்பியிருந்தார். அதில் மோடியை கடுமையாக அவர் சாடியிருந்தார்.
அதில், உங்களது செயல் மிகவும் கடுமையான ரகசியக் காப்பு விதி மீறலாகும். ஒரு வாரியத்தின் துணைக் கமிட்டியின் தலைவர் பதவியில் இருப்போர் செய்யக் கூடிய செயல் அல்ல இது.
இது நாள் வரை நிர்வாகக் குழுவில் கூட விவாதிக்காமல், தெரிவிக்காமல் பல முக்கிய விஷயங்களை நீங்கள் பகிரங்கமாக வெளியிட்டு வந்துள்ளீர்கள். ஐபிஎல் தொடர்பான ஒவ்வொரு விஷயத்தையும் தீர்மானிக்கக் கூடிய நிர்வாகக் குழு இருக்கும்போது அதைப் புறக்கணிக்கும் வகையில் செயல்படுவது சரியல்ல என்று மனோகர் கடுமையாக கூறியிருந்தார் என்பது நினைவிருக்கலாம்.
-
வாள் தூக்கி நின்ற வெங்கடேஷ் ஐயர்.. ப்ளே ஆஃப் வந்தாலே ஆளை கையில் பிடிக்க முடியாது.. இம்பேக்ட் ஆட்டம்! -
சோலி முடிஞ்சுது.. சொதப்பிய டாப் ஆர்டர் பேட்ஸ்மேன்கள்.. இனி குஜராத் கதி அவ்வளவு தான்! -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்!












Click it and Unblock the Notifications