வழக்கில் ஆஜராகாமல் டிமிக்கி – சிவகாசி டிஎஸ்பிக்கு பிடிவாரண்ட்
Subscribe to Oneindia Tamil
கோவில்பட்டி: கொலை முயற்சி வழக்கில் ஆஜாராகாத டிஎஸ்பிக்கு பிடிவாரண்ட் பிறப்பிக்கப்பட்டது.
கோவில்பட்டி சிந்தாமணி நகரை சேர்ந்த செல்லையா மகன் சேகர். இவர் தன்னை கொலை செய்வதாக மிரட்டிய அதே பகுதியை சேர்ந்த அய்யாசாமி உள்பட 4 பேர் மீது கடந்த 2005ம் ஆண்டு கோவில்பட்டி மேற்கு போலீசில் புகார் செய்தார்.
இந்த வழக்கில் விசாரணை அதிகாரியாக அப்போது பணியாற்றிய இன்ஸ்பெக்டர் ராஜகோபால் இருந்து வருகிறார். தற்போது அவர் சிவகாசியில் டிஎஸ்பியாக பணியாற்றி வருகிறார்.
இந்நிலையில் வழக்கில் ஆஜாராகாத ராஜகோபாலுக்கு நீதிபதி திருநாவுக்கரசு பிடிவாரண்ட் பிறப்பித்து உத்தரவிட்டார்.












Click it and Unblock the Notifications