ஆட்கள் தேவை என்ற விளம்பரம் மூலம் பல லட்சம் மோசடி
சென்னை: ஆட்கள் தேவை என்று விளம்பரம் கொடுத்து நூற்றுக்கணக்கானோரிடம் பல லட்சம் பண மோசடி நடந்துள்ளது.
பத்திரிக்கைகளில் சமீபத்தில் , துபாயில் வேலை வாய்ப்பு, பி.எஸ்.சி. நர்சிங், டிப்ளமோ நர்சிங், பிசியோ தெரபிஸ்ட், லேப் டெக்னீசியன், கிளீனிக் லேபர், டிரைவர், ஸ்டோர் கீப்பர், ஜவுளிக்கடை சேல்ஸ் மேன் போன்ற வேலைகளுக்கு ஆட்கள் தேவை என்ற வாசகங்களுடன் ஒரு போன் நம்பரும் இடம் பெற்றிருந்தது.
இந்தியன் டிராவல்ஸ், வடக்கு உஸ்மான் சாலை, பாரதி நகர் என்ற முகவரியும் அதில் இருந்த்து. இதைப் பார்த்து பலர் போன் எண்ணைத் தொடர்பு கொண்டு பேசினர். அப்போது அதில் பேசிய நபர்கள், டிரைவர் வேலைக்கு ரூ.25 ஆயிரம் சம்பளம், ஸ்டோர் கீப்பர் வேலைக்கு ரூ.18 ஆயிரம் சம்பளம், ஜவுளிக்கடை சேல்ஸ்மேன் வேலைக்கு ரூ.20 ஆயிரம் சம்பளம். விசா இலவசமாக வாங்கி தருகிறோம். போக்குவரத்து டிக்கெட் செலவுக்கு ரூ.40 ஆயிரம் முதல் ரூ.50 ஆயிரம் வரை கட்ட வேண்டும் என்று கூறியுள்ளனர்.
இதையடுத்து பலரும் அந்த அலுவலகத்தை அணுகி பணம் கொடுத்துள்ளனர். வருகிற 19-ந்தேதி விசா தருகிறோம். அன்றே துபாய்க்கு செல்லலாம் என்று டிராவல்ஸ் நிறுவனத்தினர் கூறினார்கள்.
இதனால் வெளியூர்களில் இருந்து நிறைய பேர் துபாய்க்கு வேலைக்கு செல்வதாக பெற்றோர்களிடமும், உறவினர்களிடமும் கூறிவிட்டு வந்து சென்னையில் தங்கி இருந்தனர்.
இந்த நிலையில் சென்னையைச்சேர்ந்த சுரேஷ் என்பவர் இந்த விளம்பரத்தை பார்த்து அதிர்ச்சி அடைந்தார். காரணம் இந்த நிறுவனம் இதே பெயரில் தக்கலையில் ஆட்களை வெளிநாடுகளுக்கு வேலைக்கு அனுப்புவதாக கூறி ஏற்கனவே நிறைய பேரிடம் மோசடி செய்திருந்தது.
அப்படி பணம் கட்டி மோசம் போனவர்களில் சுரேஷும் ஒருவர். தக்கலையில் ஏமாந்தவர்களுக்கு போன் செய்து சென்னைக்கு வரவழைத்தார் சுரேஷ். பின்னர் அவர்கள் போலீஸ் கமிஷனர் அலுவலகத்திற்குச் சென்று புகார் கொடுத்தனர்.
இதையடுத்து போலீஸ் கமிஷனர் அலுவலக உத்தரவின் பேரில்,
பாண்டி பஜார் போலீசார் அந்த முகவரிக்கு சென்று பார்த்தனர். அங்கு மானேஜர் ரவி இருந்தார். அவரை கைது செய்து பாண்டி பஜார் போலீஸ் நிலையத்துக்கு கொண்டு சென்று விசாரித்தனர். விசாரணையில் அது ஒரு டுபாக்கூர் நிறுவனம் எனத் தெரிய வந்த்து.
வேலைக்கு ஆட்கள் தேவை என்று விளம்பரம் கொடுத்து இந்த நிறுவனம் பல லட்சம் ரூபாயைப் பறித்து மோசடி செய்துள்ளது தெரிய வந்துள்ளது. போலீஸார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications