தொடர் கொள்ளை- நெல்லையில் நேபாள வாலிபர் கைது
நெல்லை: நெல்லையில் நடந்து வந்த தொடர் கொள்ளைச் சம்பவங்களில் தொடர்புடைய நேபாள வாலிபரை போலீஸார் கைது செய்தனர்.
நெல்லை மாநகரில் கடந்த சில மாதங்களாக தொடர் கொள்ளை நடந்து வருகின்றன. பூட்டி கிடக்கும் வீடுகள் மற்றும் கடைகளை கண்காணித்து நகை, பணத்தை கொள்ளையடித்து வருகின்றனர்.
பாளையங்கோட்டை தியாகராஜ நகர், சாந்தி நகர், பெருமாள்புரம், ஐகிரவுண்ட் பகுதிகளில் கடைகளின் பூட்டை உடைத்து கொள்ளை நடந்துள்ளது.
தியாகராஜ நகரில் வெளிநாட்டில் வேலை பார்ப்பவரின் வீட்டை உடைத்து 18 பவுன் நகையை கொள்ளையடித்தனர். தச்சநல்லூர் நல்மேய்ப்பார் நகரில் கடற்படை அதிகாரி வீட்டில் பட்டப்பகலில் 25 பவுன் நகை கொள்ளையடிக்கப்பட்டது.
இதையடுத்து கொள்ளையர்களை பிடிக்க மாநகர போலீஸ் கமிஷனர் அபய்குமார்சிஹ் உத்தரவின் பேரில் துணை கமிஷனர் நிஜாமூதின், மேற்பார்வையில் உதவி க்மிஷனர் பரமானந்தம், இன்ஸ்பெக்டர் முகமது மைதீன் ஆகியோர் தலைமையில் தனிப்படை போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகி்ன்றனர்.
இந்நிலையில் பாளையங்கோட்டை அன்புநகர் என்எச் காலனி பகுதியில் நேற்று சந்தேகப்படும்படி நின்று கொண்டிருந்த வாலிபரை பிடித்து போலீசார் விசாரித்தனர். அவரத கையில் கடப்பாரை மற்றும் உடைக்கப்பட்ட பூட்டு, ரூ,5 ஆயிரம் ஆகியவை இருந்தது. விசாரணையில் நேபாளத்தை சேர்ந்த கோபால்ஜி என்பது தெரிய வந்தது. என்எச் காலனி 4வது குறுக்கு தெருவை சேர்ந்த ஓய்வு பெற்ற அரசு ஊழியர் ராமலிங்கம் என்பவரது வீ்ட்டை உடைத்து ரூ.5 ஆயிரத்தை அவர் திருடியிருப்பது தெரிய வந்தது.
பிரபல கொள்ளையரான இவர் மீது தென்காசி, குற்றாலம் பகுதிகளில் பல்வேறு திருட்டு வழக்குகள் உள்ளன. நெல்லை மாநகரிலும் தனது கூட்டாளிகளுடன் கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்டுள்ளார்.
போலீசாரை கண்டதும் கோபால்ஜியின் நண்பர்கள் தப்பியோடி விட்டனர். அவர்களை போலீசார் தேடி வருகின்றனர். கோபால்ஜியிடம் இருந்து ரூ.5 ஆயிரம் பறிமுதல் செய்யப்பட்டது. கூர்க்கா வேலைக்காக தமிழகத்திற்கு வரும் இவர்கள் பின்னர் பூட்டி கிடக்கும் வீடுகளை நோட்டம் பார்த்து கொள்ளையடித்து விட்டு மீண்டும் நோபாளத்திற்கு சென்று விடுகின்றனர். இந்த கும்பலை பிடிக்க போலீசார் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ்












Click it and Unblock the Notifications