கடன் வாங்கித் தருவதாக கூறி ரூ.1 லட்சம் மோசடி – 2 பெண்கள் உள்பட மூவருக்கு வலை வீச்சு
பாவூர்சத்திரம்: ரூ.10 லட்சம் கடன் வாங்கி தருவதாக கூறி பலரிடம் ரூ.1 லட்சம் வரை மோசடி செய்த 2 பெண்கள் உள்பட 3 பேரை போலீசார் தேடி வருகின்றனர்.
பாவூர்சத்திரம் அருகேயுள்ள திரவியம் நகர் எல்லைபுளியை சேர்ந்தவர் ராமசாமி. டீக்கடை நடத்தி வருகிறார். இவரிடம் ஒருவருடத்திற்கு முன்பு திப்பணம் பட்டியை சேர்ந்த கிருஷ்ணன் மனைவி உமாபார்வதி, பெத்தநாடார்பட்டியை சேர்ந்த சமுத்திரம் மகள் விநாயகி ஆகிய இருவரும் மத்திய அரசி்ன் கேவிஐசி என்ற நிறுவனம் மூலம் ரூ.10 லட்சம் வரை கடன் பெற்று தருகிறோம். அதற்கு ரூ.30 ஆயிரம் கமிஷன் தர வேண்டும் என்று கூறியுள்ளனர்.
கடன் கிடைக்கும் ஆசையில் ராமசாமி 30 ஆயிரமும், சீதாராமன் பட்டியை சேர்ந்த ரமேஷ் 30 ஆயிரமும், அரியபுரத்தை அயோத்திராமன் 21 ஆயிரமும், முருகன் 8 ஆயிரமும், முத்துக்கனி 6 ஆயிரமும், செங்காநல்லூர் கோட்டி முத்து 12 ஆயிரமும் என 1 லட்சத்து 7 ஆயிரம் பணம் கொடுத்துள்ளனர்.
ஒரு வருடம் ஆகியும் கடன் பற்றி எந்த தகவலும் வராததால் ராமசாமி பாவூர்சத்திரம் போலீசில் புகார் செய்தார். இது சம்பந்தமாக பாவூர்சத்திரம் போலீசார் சம்பந்தப்பட்ட பெண்களிடம் விசாரணை நடத்தினர். அவர்கள் 2.9.2009 தாங்கள் வாங்கிய பணத்தை திருப்பி கொடுத்து விடுவதாக உறுதியளித்தனர்.
ஆனால் சொன்னபடி பணம் கொடுக்காமல் இருவரும் தலைமறைவாக இரு்ந்து வந்தனர். இந்நிலையில் நேற்று உமாபாரதி வீட்டில் இருப்பதாக தகவல் தெரிந்த ராமசாமி அங்கு சென்று பணத்தை கேட்டுள்ளார்.
அப்போது உமா பார்வதியும் அவரது உறவினர் சந்திரசேகரும் பணம் தரமுடியாது, உன்னால் முடிந்ததை செய், இனி பணம் கேட்டு வந்தால் கொல்லாமல் விடமாட்டோம் என மிரட்டியுள்ளனர்.
இதுகுறித்து ராமசாமி பாவூர்சத்திரம் போலீசில் புகார் செய்தார். இன்ஸ்பெக்டர் சண்முகம் மற்றும் போலீசார் உமா பார்வதி, சந்திரசேகர், விநாயகி ஆகிய 3 பேரையும் தேடி வருகின்றனர்.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications