தான்டேவாடா படுகொலை: விசாரணைக் குழுத் தலைவரின் பாதுகாவலர் மீது தாக்குதல்
ராய்ப்பூர்: தான்டாவாடா படுகொலைச் சம்பவம் தொடர்பாக விசாரிக்க நியமிக்கப்பட்டுள்ள முன்னாள் எல்லைப் பாதுகாப்புப் படை இயக்குநர் ராம் மோகனின் பாதுகாவலர் மீது நக்சலைட்டுகள் தாக்குதல் நடத்தியுள்ளனர்.
ஏப்ரல் 6ம் தேதி சட்டிஸ்கர் மாநிலம் தான்டேவாடா வனப்பகுதியில் சிஆர்பிஎப் போலீஸார் மீது நக்சலைட்டுகள் கொடூரத் தாக்குதல் நடத்தி 76 பேரைக் கொன்றனர்.
இந்தச் சம்பவம் தொடர்பாக ராம் மோகன் கமிட்டி விசாரணை நடத்தி வருகிறது. இதற்காக ராம் மோகன் தான்டேவாடா மாவட்டத்தில் தங்கியுள்ளார்.
இந்த நிலையில் இன்று ராம் மோகனின் பாதுகாவலர்களை நக்சலைட்டுகள் தாக்கியுள்ளனர். சிஆர்பிஎப் போலீஸாரின் சீருடையில் வந்து அவர்கள் தாக்குதல் நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
ராம் மோகன் பாதுகாவலர்கள் மீது நக்சலைட்டுகள் சில சுற்று துப்பாக்கிச் சூடு நடத்தினர். பதிலுக்கு பாதுகாவலர்களும் சுட்டனர். இந்த சண்டையில் உயிர்ப்பலி ஏதும் இல்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
தங்களது ஆதிக்கம் இன்னும் இருப்பதைக் காட்டும் வகையில் இந்தத் தாக்குதலை நக்சலைட்டுகள் நடத்தியுள்ளதாக கருதப்படுகிறது.
இச்சம்பவத்தைத் தொடர்ந்து ராம் மோகனுக்கான பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications