சிகிச்சைக்காக சென்னை வந்த பிரபாகரனின் தாயார் பார்வதி அம்மாள் திருப்பி அனுப்பப்பட்டார்

ஈழத்தில் போரை முடித்த இலங்கைப் படையினர் பிரபாகரனின் தாயார் பார்வதி அம்மாளையும், தந்தையார் வேலுப்பிள்ளையையும் சிறை பிடித்து தனி முகாமில் வைத்திருந்தது. இவர்களில் வேலுப்பிள்ளை இலங்கையில் அதிபர் தேர்தல் நடப்பதற்கு சில நாட்களுக்கு முன்பு திடீரென உயிரிழந்தார்.
அதன் பின்னர் தனித்து விடப்பட்ட பார்வதி அம்மாள் சில மாதங்களுக்கு முன்பு மலேசியாவுக்கு அனுப்பி வைக்கப்பட்டார். அங்குள்ள உறவினர் வீட்டில் தங்கியுள்ள பார்வதி அம்மாளுக்கு பக்கவாதப் பிரச்சினை உள்ளது.
இதற்காக சிகிச்சை மேற்கொள்வதற்காக பார்வதி அம்மாளும், ஒரு பெண்மணியும், விமானம் மூலம் நேற்று இரவு சென்னை வந்தனர். ஆனால் குடியேற்றப் பிரிவு அதிகாரிகள் அவரை விமானத்திலிருந்து இறங்க அனுமதிக்கவில்லை. அவர் பிரபாகரனின் தாயாரா என்பதை விசாரித்து அதை உறுதி செய்து கொண்ட பின்னர், உங்களை நாட்டுக்குள் அனுமதிக்க மத்திய அரசிடமிருந்து அனுமதி இல்லை. எனவே அனுமதிக்க முடியாது என்று கூறியுள்ளனர்.
அதற்குப் பார்வதி அம்மாளுடன் வந்த பெண், சிகிச்சைக்காக மட்டுமே இங்கு அழைத்து வந்துள்ளோம் என்று கூறியுள்ளார். ஆனால் அதை குடியேற்றப் பிரிவு அதிகாரிகள் பிடிவாதமாக நிராகரித்து விட்டனர். பின்னர் பார்வதி அம்மாளையும், அவருடன் வந்தவரையும் இறங்க அனுமதிக்காமல், அதே விமானத்தில் மீண்டும் மலேசியாவுக்கு அனுப்பி வைத்து விட்டனர்.
விமான நிலையத்தில் வைகோ, நெடுமாறன்:
முன்னதாக பார்வதி அம்மையார் வந்திருக்கும் தகவல் அறிந்தவுடன் மதிமுக பொதுச் செயலாளர் வைகோ, தமிழர் தேசிய இயக்கத் தலைவர் பழ. நெடுமாறன் மற்றும் நூற்றுக்கணக்கான தொண்டர்கள் விமான நிலையத்தில் குவிந்து விட்டனர்.
இதைத் தொடர்ந்து புறநகர் போலீஸ் கமிஷனர் ஜாங்கிட் நேரடியாக வந்து பாதுகாப்பு ஏற்பாடுகளைக் கண்காணித்தார். விமான நிலையத்தில் பதட்டம் நிலவியதால் பரபரப்பு ஏற்பட்டது.
வைகோவும், நெடுமாறனும் அனுமதிக்கப்பட்ட பகுதி வரை செல்லக் கூடிய டிக்கெட்களுடன் உள்ளை செல்ல முயன்றனர். ஆனால் விமான நிலைய போலீஸார் அவர்களை உள்ளே அனுமதிக்காமல் தடுத்து நிறுத்தினர். இதனால் அங்கு பெரும் தள்ளுமுள்ளு ஏற்பட்டது.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications