தமிழகத்தில் குறைந்த அளவே மின்வெட்டு உள்ளது - ஆற்காடு வீராசாமி

மின்வெட்டுப் பிரச்னைக்காக நெய்வேலியில் ஆர்ப்பாட்டம் நடத்தப்போவதாக அதி.மு.க. பொதுச்செயலாளர் ஜெயலலிதா அறிவித்துள்ளதைத் தொடர்ந்து, அதற்கு பதிலளிக்கும் வகையில் அறிக்கை வெளியிட்டுள்ளார் ஆற்காடு வீராசாமி.
அந்த அறிக்கை:
தமிழக முதல்வராக ஜெயலலிதா இருந்தபோது, மாநிலத்தின் தேவைக்கேற்ப புதிய மின் உற்பத்தித் திட்டங்களைத் தொடங்கியிருப்பாரேயானால், இப்போதுள்ள குறைந்த மின்வெட்டு கூட மாநிலத்திலே ஏற்பட்டிருக்காது.
மாநிலத்தில் தற்போதுள்ள ஓரளவு மின் பற்றாக்குறைக்கும் காரணமே ஜெயலலிதாதான்.
2006-ம் ஆண்டு தி.மு.க. ஆட்சிக்கு வந்தப் பிறகுதான், பல மின் உற்பத்தி திட்டங்கள் தொடங்கப்பட்டன. அந்தத் திட்டங்கள் இன்னும் ஓரிரு ஆண்டுகளில் செயல்படத் தொடங்கும்போது, இப்போதுள்ள மின்வெட்டு கூட தமிழகத்திலே இருக்காது.
இப்போதைய மின்வெட்டுக் கூட விவசாயிகளையோ, மாணவர்களையோ, தேர்வுத் தாள் திருத்தும் ஆசிரியர்களையோ பாதிக்காத அளவுக்குத் தான் செய்யப்பட்டுள்ளன.
மாணவர்களுக்குத் தேர்வுகள் முடிந்து விடுமுறை தொடங்கிவிட்ட நிலையில், மாணவர்கள் பாதிக்கப்படுவதாகக் கூறி ஜெயலலிதா ஆர்ப்பாட்டம் நடத்தப் போவதாக அறிவிக்கிறார். அவரது அறிவிப்பு ஏதோ உள்நோக்கத்தாடு தான் இருக்கிறது என்பது இதிலிருந்து புரிகிறது.
நாட்டையே மின்வெட்டால் இருட்டாக்கி வைத்திருக்கிறோம் என்று ஜெயலலிதா தெரிவித்துள்ளார். அவருடைய அறிக்கையை உண்மை என்று யாரும் நம்பத் தயாராக இல்லை. 2010 முதல் 2014 வரை மொத்தம் 7,798 மெகாவாட் மின்சாரம் பல்வேறு புதிய மின் திட்டங்களின் மூலமாக கிடைக்க வழிவகை செய்யப்பட்டுள்ளது.
இவை தவிர, ரூ.18 ஆயிரம் கோடி மதிப்பீட்டில் காஞ்சிபுரம் மாவட்டம் செய்யூரில் 4,000 மெகாவாட் மின்சாரம் உற்பத்தித் திட்டத்துக்கான பூர்வாங்க வேலைகளும் தற்போது தொடங்கப்பட்டுள்ளன. வருங்காலத்தில் மின்சாரப் பற்றாக்குறை ஏதுமின்றி, எந்தவொரு மின் தேவையையும் பூர்த்தி செய்துகொள்ளும் நிலையில் தமிழ்நாடு இருக்கும். இதில் எந்தவிதமான ஐயமும் இல்லை," என்று குறிப்பிட்டுள்ளார் ஆற்காடு வீராசாமி.
-
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட்












Click it and Unblock the Notifications