சர்வதேசப் புகழ் பெற்ற நிர்வாகச் சிந்தனையாளர் சி.கே.பிரஹலாத் மரணம்

Subscribe to Oneindia Tamil

Prahalad
சான்டியாகோ: சர்வதேச அளவில் மிகப் புகழ் பெற்ற நிர்வாகச் சிந்தனையாளர்களில் ஒருவரான சி.கே.பிரஹலாத் உடல் நலக்குறைவு காரணமாக, அமெரிக்காவின் சான் டியாகோ நகரில் சனிக்கிழமை காலமானார். அவருக்கு வயது 68.

மனைவி காயத்ரி, மகன் முரளி, மகள் தீபாவுடன் அமெரிக்காவில் வாழ்ந்து வந்தார் அவர்.

பிரஹலாத்தின முழுப் பெயர், கோயம்புத்தூர் கிருஷ்ணராவ் பிரஹலாத். உலக அளவில் நிர்வாகச் சிந்தனையில் சிறப்பிடம் பெற்றவர். 1941 ஆம் ஆண்டு பிறந்தவர். சென்னை - லயோலா கல்லூரியில் பி.எஸ்சி இயற்பியல் படித்தவர். பின்னர் அகமதாபாத் ஐ.ஐ.எம்.-மில் நிர்வாகவியல் படித்தார். பாஸ்டன் ஹாவர்ட் பிஸினஸ் ஸ்கூலில்1975 ஆம் ஆண்டு டி.பி.ஏ. (Doctor of Business Administration) பட்டம் பெற்றார்.

பின்னர் இந்தியா திரும்பியவர், அகமதாபாத் ஐ.ஐ.எம்.-மில் 1976-77 வரை பேராசிரியராக பணியாற்றினார். மிச்சிகனில் உள்ள ரோஸ் ஸ்கூல் ஆஃப் பிஸினஸ் ஸ்கூலில் நிர்வாகவியல் பேராசிரியராக பல ஆண்டுகாலமாக பணியாற்றி வந்தார்.

நிர்வாகவியல் குறித்து பயனுள்ள புத்தகங்கள் பலவற்றை எழுதியுள்ளார். நிர்வாகவியல் குறித்த இவரது கருத்தரங்குகளும், உரைகளும் ஆர்வத்தைத் தூண்டவல்லவை.

கடந்த 2009 -ம் ஆண்டில் பிரவேசி பாரதிய சாம்னம் விருதையும், இந்திய அரசின் உயரிய விருதுகளில் ஒன்றான பதம பூஷன் விருதையும் பெற்றவர். கடந்த ஆண்டு 'தி டைம்ஸ்' இதழ் வெளியிட்ட உலகின் 50 நிர்வாக சிந்தனையாளர்கள் பட்டியலில் இவரது பெயரும் இடம்பெற்றது.

வியாபாரம் என்பது பணம் படைத்த சிலரை மட்டுமே மனதில் கொண்டு செய்யப்படுவதாக இருக்கக்கூடாது. பெரும்பாலான ஏழை மக்களைக் குறிவைத்து நடத்தப்படுவதாக இருக்கவேண்டும்... என்பது இவரது கருத்து. அதாவது பிரமிடின் அடிப்பாகம் போலத்தான் இந்த ஏழை மக்கள் என்பது இவர் கருத்து.

அதனால்தான் விலை மலிவான பொருள்கள் மற்றும் விலை உயர்ந்த பொருள்கள் ஏழைகளும் வாங்கத்தக்க அளவுகளில் கிடைக்க ஆரம்பித்தன. ரிலையன்ஸ் நிறுவனத்தின் செல்போன் டெக்னிக் கூட பிரஹலாதின் சித்தாந்தம்தான்.

இதனால்தான் இவரை மேனேஜ்மெண்ட் குரு என்று செல்லமாக அழைத்தனர் வர்த்தகத் துறையினர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+