ஐபிஎல் கொச்சி உரிமையாளர்கள் குறித்த விசாரணை - பிரணாப் முகர்ஜியிடம் அறிக்கை தாக்கல்

இதில் ஐபிஎல் கொச்சி அணியின் உரிமையாளர்கள், அவர்கள் குறித்த முழு தகவல்கள், ம்ற்றும் ஐபிஎல் அமைப்பில் செய்யப்பட்டுள்ள முதலீடுகள், அணிகளின் நிதி நிர்வாக விவரம், பினாமி முதலீடுகள் உள்ளிட்டவை குறித்த விவரங்கள் அடங்கியிருப்பதாக தெரிகிறது.
இதுதவிர அனைத்து அணிகளின் உரிமையாளர் விவரங்கள், ஏலம் நடந்தபோது கேட்கப்பட்ட தொகைகள் உள்ளிட்ட அனைத்து விவரங்களையும் இந்திய கிரிக்கெட் வாரியத்திடம் வருமான வரித்துறை கோரியுள்ளது. தற்போது ஐபிஎல் விவகார வழக்கை பிரணாப் முகர்ஜியே நேரடியாக கையாளுகிறாராம். இதனால் மோசடி செய்த யாரும் தப்ப முடியாது என்று நிதியமைச்சக வட்டாரத் தகவல்கள் கூறுகின்றன.
ஐபிஎல் மற்றும் சசி தரூர் விவகாரம் நாடாளுமன்றத்தில் புயலைக் கிளப்பியுள்ளது. இரு அவைகளையும் நடத்த விடாமல் எதிர்க்கட்சியினர் அமளியில் ஈடுபட்டு வருகின்றனர். இதையடுத்து இந்த விசாரணையை விரைவுபடுத்தி மேலும் பல தகவல்களை சேகரித்து அதை பிரதமரிடம் ஒப்படைக்க பிரணாப் முகர்ஜி முடிவு செய்துள்ளார். இதன் மூலம் தரூர் மற்றும் ஐபிஎல் சர்ச்சை தொடர்பாக நாடாளுமன்றத்தில் விரிவாக விளக்கம் அளிக்க முடியும் என அரசு நம்புகிறது.












Click it and Unblock the Notifications