மன்மோகன் சிங்கை சந்தித்தார் தரூர் – ஐபிஎல் சர்ச்சை குறித்து விளக்கம்

இதையடுத்து இன்று மாலை நடைபெறும் காங்கிரஸ் கூட்டத்தில் தரூர் மீதான நடவடிக்கை குறித்து முடிவெடுக்கப்படவுள்ளது.
ஐபிஎல் கொச்சி அணி தொடர்பான சர்ச்சையில் சிக்கியுள்ள தரூருக்கு காங்கிரஸ் கட்சிக்குள்ளேயே கடும் நெருக்கடி ஏற்பட்டுள்ளது. மேலும் எதிர்க்கட்சிகளும் ஒட்டுமொத்தமாக சேர்ந்து கொடி உயர்த்தியுள்ளன.
தொடர்ந்து அவர் பல்வேறு சர்ச்சைகளில் சிக்கி வந்தபோதிலும் அவரை மன்னித்து விட்டு விட்ட சோனியாவும், பிரதமரும், இந்த முறையும் அப்படியே நடந்து கொள்வார்கள் என எதிர்பார்க்க முடியாது என காங்கிரஸ் தரப்பிலேயே கூறப்படுகிறது.
இந்த நிலையில் இன்று பிற்பகல் பிரதமரைச் சந்தித்தார் தரூர். அவரிடம் ஐபிஎல் கொச்ச அணி சர்ச்சை குறித்து விரிவாக விளக்கினார். தனது தரப்பு நியாயத்தையும் எடுத்து வைத்த்தாகத் தெரிகிறது.
பிரதமருடன் தரூர் நடத்திய சந்திப்பின்போது மூத்த அமைச்சர்களான ப.சிதம்பரம், ஏ.கே.அந்தோணி ஆகியோரும் உடன் இருந்தனர்.
இந்தக் கூட்டத்தில் என்ன தீர்மானிக்கப்பட்டது என்பது தெரியவில்லை. ஆனால் ரெண்டஸ்வஸ் குழுமத்தில் உள்ள தனது பங்குகளை தரூரின் தோழியான சுனந்தா முழுமையாக விட்டுக் கொடுத்து விட வேண்டும். அப்படிச் செய்தால் தரூரின் பதவி தப்பும் என அவருக்கு உறுதிபட தெரிவிக்கப்பட்டதாக கூறப்படுகிறது. இதற்கு தரூர் ஒத்துக் கொண்டதாகவும் தெரிகிறது.
எனவே இந்த முறையும் தரூர் தப்பி விடுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இன்று மாலை ஆறரை மணியளவில் காங்கிரஸ் கட்சியின் முக்கியக் குழு கூட்டம் நடைபெறுகிறது. அதில் பிரதமர், சோனியா காந்தி கலந்து கொள்கின்றனர். அப்போது தரூர் விவகாரம் தொடர்பாக இறுதி முடிவு எடுக்கப்பட்டு அறிவிக்கப்படும்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications