ஜெஸ்ஸிகா லால் கொலை வழக்கு- மனு சர்மாவுக்கு விதிக்கப்பட்ட ஆயுள் தண்டனை உறுதி

கடந்த 1999ம் ஆண்டு ஏப்ரல் 29ம் தேதி டெல்லி ஹோட்டல் ஒன்றில், ஜெஸ்ஸிகா லால் விருந்து ஒன்றில் கலந்து கொண்டார். அந்த ஹோட்டல் டிசைனர் பினா ரமணிக்குச் சொந்தமானதாகும். அப்போது அங்கு வந்த மனு சர்மா, மது அருந்த வருமாறு ஜெஸ்ஸிகாவை அழைத்தார். அதற்கு ஜெஸ்ஸிகா மறுக்கவே தனது துப்பாக்கியால் ஜெஸ்ஸிகாவை சுட்டு விட்டார் மனு சர்மா. இதில் ஜெஸ்ஸிகா படுகாயமடைந்தார். அவரை பினா ரமணி மருத்துவமனைக்குக் கொண்டு சென்றார். ஆனால் ஏற்கனவே ஜெஸ்ஸிகா இறந்து விட்டதாக டாக்டர்கள் தெரிவித்தனர்.
2 நாட்கள் கழித்து மனு சர்மாவின் டாடா சபாரி கார் நோய்டா பகுதியில் அனாதையாக நின்றது. பின்னர் மனு சர்மா சில நாட்களில் போலீஸில் சரணடைந்தார். ஆனால் தான் ஜெஸ்ஸிகாவைக் கொல்லவில்லை என்று அவர் மறுத்தார்.
இந்த வழக்கை விசாரித்த கீழ் கோர்ட் மனு சர்மாவை விடுவித்து 2006ம் ஆண்டு தீர்ப்பளித்தது. இதை எதிர்த்து அரசுத் தரப்பில் உயர்நீதிமன்றத்தில் மனு செய்யப்பட்டது. அந்த மனுவை விசாரித்த டெல்லி உயர்நீதிமன்றம் மனு சர்மாவுக்கு ஆயுள் தண்டனை விதித்து உத்தரவிட்டது.
இத்தீர்ப்பை எதிர்த்து மனு சர்மா உச்சநீதிமன்றத்தில் அப்பீல் செய்தார். அதை விசாரித்த உச்சநீதிமன்றம், சந்தேகத்திற்கிடமின்றி மனு சர்மா மீதான புகார்களை போலீஸ் தரப்பு நிரூபித்துள்ளது. எனவே மனு சர்மாவுக்கு விதிக்கப்பட்ட தண்டனை உறுதி செய்யப்படுவதாக அறிவித்தது.
இந்தத் தீர்ப்பு குறித்து ஜெஸ்ஸிகாவின் சகோதரி சப்ரீனா லால் கூறுகையில், எனது குடும்பத்தினர் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். இந்த்த் தீர்ப்பு எங்களை திருப்திப்படுத்தியுள்ளது என்றார்.
தீர்ப்பு குறித்து டெல்லி உயர்நீதிமன்ற முன்னாள் நீதிபதி ஆர்.எஸ்.சோதி கூறுகையில், மனு சர்மாவுக்கு நான்தான் ஆயுள் தண்டனை விதித்து தீர்ப்பளித்தேன். தற்போது அதை உச்சநீதிமன்றம் உறுதி செய்திருப்பது மகிழ்ச்சி அளிக்கறது.
மீடியாக்கள்தான் நீதி நிலை நாட்டப்பட்டதற்கு முக்கியக் காரணம். அவர்களால்தான் குற்றவாளி எந்த நிலையிலும் தப்ப முடியாமல் போனது என்றார்.
மனு சர்மா, முன்னாள் காங்கிரஸ் மத்திய அமைச்சர் வினோத் சர்மாவின் மகன் என்பது குறிப்பிடத்தக்கது.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications