கருணாநிதி சொல்வது நம்பக்கூடியதாக இல்லை-விஜயகாந்த்
சென்னை: பார்வதி அம்மாள் தமிழ்நாட்டிற்கு வருவதை தடுத்த தடை ஆணை பட்டியலை மத்திய அரசிடம் எடுத்துச் சொல்லி நீக்க முதல்வர் கருணாநிதி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தேமுதிக தலைவர் விஜயகாந்த் கோரியுள்ளார்.
அவர் வெளியிட்டுள்ள அறிக்கை:
விடுதலைப் புலிகள் இயக்கத் தலைவர் பிரபாகரனின் தாயார் பார்வதி அம்மாள் பக்கவாத சிகிச்சைக்காக மலேசியாவிலிருந்து சென்னைக்கு விமானம் மூலம் வந்த பொழுது, அன்று இரவே சென்னையில் அவரை இறங்கவிடாமல் இந்திய அரசின் அதிகாரிகளால் தடுக்கப்பட்டு மீண்டும் மலேசியாவுக்கு அதே விமானத்தில் திருப்பி அனுப்பப்பட்டார்.
மலேசியாவிற்கு திருப்பி அனுப்பப்பட்ட பார்வதி அம்மாள் வைத்திய வசதி செய்து கொள்ள மீண்டும் தமிழகத்திற்குத்தான் வர விரும்புகிறேன் என்று அறிவிப்பார்களேயானால், தமிழ்நாடு அரசு அதைப் பரிசீலனை செய்து மத்திய அரசுக்கு அதுபற்றி எழுத தயாராக இருக்கிறது என்றும், மத்திய அரசு பதில் தருமானால் அதுபற்றிய விளக்கம் தேவைப்பட்டால் தெரிவிக்கப்படும்' என்றும் முதல்வர் கூறியுள்ளார்.
பாகிஸ்தான், அரேபியா போன்ற நாடுகளிலிருந்து இங்கே வைத்தியம் செய்து கொள்ள வருவதைப்போல, அவரும் ஒரு பயணியாக வந்துள்ளாரே தவிர ஒரு முக்கிய அரசியல் பிரமுகராக அல்ல என்று தெரிகிறது.
இந்த விஷயம் பற்றி தனக்கு தெரிவிக்கவில்லை என்று தமிழக முதல்வர் கருணாநிதி குறைப்பட்டுக் கொள்வதில் அர்த்தமில்லை. சென்னை விமான நிலையத்தில் மத்திய, மாநில அரசுகளின் உளவுத்துறையினர் இருக்கிறார்கள். அவர்களுக்கு இந்த தகவல் உடனடியாகத் தெரிந்திருக்கும். அப்படியிருக்க தனக்கு தெரியாது என்று முதல்வர் கருணாநிதி சொல்வது நம்பக்கூடியதாக இல்லை.
இந்திய அதிகாரிகள் மூலம் விசா பெற்றுதான் பார்வதி அம்மாள் சென்னை வந்திருக்கிறார். சென்னை விமான நிலையத்தில் தன்னை இறங்கவிடமாட்டார்கள் என்று அவர் எப்படி எதிர்பார்த்திருக்க முடியும்?.
அவரை இறங்கவிடாமல் தடுத்தது இந்திய அரசுதான். ஆகவே இத் தகவல் தெரிந்தும் மெளனம் சாதித்துள்ளது தமிழக அரசு. ஆகவே, தடை ஆணை விதித்த இந்திய அரசும் அதற்கு துணை போன முதல்வர் கருணாநிதியும்தான் மீண்டும் பார்வதி அம்மாள் சென்னைக்கு வர நடவடிக்கை எடுக்க வேண்டும். ஆனால் அதற்கு பதிலாக பார்வதி அம்மாள் கோரிக்கை வைத்தால் பரிசீலிப்போம் என்று சொல்வது என்ன நியாயம்?
2003ம் ஆண்டில் அன்றைய முதல்வர் ஜெயலலிதா கேட்டுக்கொண்டதற்கு இணங்க பிரபாகரனின் பெற்றோர் மீண்டும் இந்தியாவுக்கு வர தடை விதித்துள்ளதாக சொல்லப்படுகிறது. அன்றைக்கு விடுதலைப் புலிகள் இயக்கம் இருந்த சூழ்நிலை வேறு, இன்றைய நிலை வேறு. 2003ம் ஆண்டு பட்டியலை 10 ஆண்டுகள் கழித்து தான் பரிசீலிக்க வேண்டும் என்பதில்லை.
தமிழ்நாடு அரசின் சார்பில் முதல்வர் இந்த தகவல் தனக்கு தெரிந்த உடனேயே இன்றைய சூழ்நிலையை மத்திய அரசுக்கு எடுத்துச் சொல்லி அந்த பட்டியலை ரத்து செய்திருக்கலாம்.
1979ம் ஆண்டிலிருந்தே பிரபாகரனின் பெற்றோர்கள் அவரைப் பிரிந்து தான் வாழ்கின்றனர். 2003ம் ஆண்டில் இலங்கையில் போர் நிறுத்த ஒப்பந்தம் ஏற்பட்ட பொழுது மீண்டும் அவர்கள் இங்கிருந்து இலங்கை சென்றனர்.
பிரபாகரனை இந்தியா பிரகடனப்படுத்தப்பட்ட குற்றவாளி என்று அறிவித்ததற்கும் பிரபாகரனின் பெற்றோர்களுக்கும் என்ன சம்பந்தம்?.
வயதான காலத்தில் தனியே விடப்பட்டு தமிழினத்திற்கு தாய் நாடான தமிழ்நாட்டிற்கு வந்து சிகிச்சை செய்து கொள்ளலாம் என்று வந்த 80 வயதான பார்வதியம்மாளை இங்குள்ள அரசுகள் திருப்பி அனுப்பிய பொழுது அந்த தாய் உள்ளம் எத்தகைய வேதனை அடைந்திருக்கும் என்பதை நாம் எண்ணிப் பார்க்க வேண்டாமா?.
எனவே, மனிதாபிமான அடிப்படையிலும், தமிழ்நாட்டின் முதல்வர் என்ற அடிப்படையிலும், தானே முன் வந்து மத்திய அரசிடம் எடுத்துச் சொல்லி பார்வதி அம்மாள் தமிழ்நாட்டிற்கு வருவதை தடுத்த அந்த தடை ஆணை பட்டியலை அறவே நீக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன் என்று கூறியுள்ளார் விஜயகாந்த்.
நாளை திருமாவளவன் போராட்டம்:
வேலூர் விருதம்பட்டு திருநகரில் விடுதலை சிறுத்தைகள் கட்சியும், மக்கள் பண்பாட்டு இயக்கமும் இணைந்து நடத்தும் ஏழை, மாணவ-மாணவிகளுக்கான இலவச கம்ப்யூட்டர் பயிற்சி முகாம் தொடக்க விழா நடந்தது.
முகாமை தொடங்கி வைத்து திருமாவளவன் பேசுகையில்,
பிரபாகரனின் தாயார் பார்வதியம்மாள் பக்கவாத நோயால் பாதிக்கப்பட்டுள்ளதால் சிகிச்சை பெறுவதற்காக கடந்த 16ம் தேதி மலேசியாவில் இருந்து சென்னை வந்தார். விமான நிலைய அதிகாரிகள் அவர் வந்த விமானத்தை தரையிறங்க விடாமல் மீண்டும் மலேசியாவிற்கு திருப்பி அனுப்பியுள்ளனர்.
இந்த செயல் வன்மையாக கண்டிக்கத்தக்கது. இதை கண்டித்து நாளை (21ம் தேதி) சென்னையில் எனது தலைமையில் ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என்றார்.
-
திமுகவை விட 2% வாக்கு அதிகம்.. 3ம் இடத்திற்கு செல்கிறது அதிமுக.. புதிய டேட்டாவுடன் வந்த ஆதவ் அர்ஜுனா -
"தயவு செய்து தண்ணீரை கொடுங்க.." இந்தியாவிடம் கெஞ்சும் பாகிஸ்தான்.. பஞ்சம் மோசமாக தாக்கும் போல! -
முதல் விக்கெட்.. திமுக கூட்டணியில் விலகிய தமிழக வாழ்வுரிமை கட்சி.. அறிவித்தார் வேல்முருகன் -
இதுக்கு மேல கடன் வாங்க முடியாது.. கஜானா காலி.. தத்தளிக்கும் தமிழக வெற்றிக் கழகம்.. அப்போ விஜய்? -
வளைகுடா வளையம்: ஈரானிடம் இந்தியா வைத்த 'செக்'.. தவிப்பில் கச்சா எண்ணெய்! டெல்லி மெகா முடிவு -
டிராகனின் வெள்ளி வேட்டை.. சீனாவைச் சுழற்றியடிக்கும் சில்வர் ஜுரம்.. வெள்ளி இனி குட்டித்தங்கம்.. ஏன்? -
நோட் பண்ணுங்க! கலைஞர் மகளிர் உரிமைத் தொகைக்கு 'செக்' - ரேஷன் கார்டில் இதை கவனிக்கலைன்னா பணம் கட்? -
கழுத்தறுத்த பாஜக..சரண்டராகும் சரத்குமார்! பஞ்சாயத்தை கூட்டிய நாட்டாமை குடும்பத்தார்! பரபர பாலிடிக்ஸ் -
பென்டகன் பிளான் ரெடி.. ஈரானுக்குள் நுழையும் அமெரிக்க வீரர்கள்! கதை மொத்தமா முடியுது! -
Siragadikka Aasai Promo: விஜயாவுக்கு எதிராக ஆதாரத்தை கண்டுபிடித்த முத்து- மீனா.. சிந்தாமணிக்கு ஆப்பு! செம சம்பவம் -
பாஜக நட்சத்திர பேச்சாளர் பட்டியலில் இருந்து தமிழிசை பெயர் நீக்கம்.. பின்னணி இதுதானா? -
தப்புக் கணக்கான ராதிகாவின் முடிவு? மீண்டும் சமத்துவ மக்கள் கட்சியை தொடங்குகிறாரா சரத்குமார்?












Click it and Unblock the Notifications