புனே, அகமதாபாத் ஐபிஎல் அணிகளை வாங்க அடானி, வீடியோகான் நிறுவனங்கள் கொடுத்த ஏல ஆவணங்கள் மாயம்

இந்த ஏலத்தில் அடானி மற்றும் வீடியோகான் நிறுவனங்கள் தோல்வி அடைந்தன. இந்தத் தோல்விதான், தரூர், மோடி இடையிலான மோதலுக்கு முக்கியக் காரணமாக கருதப்படுகிறது.
ஐபிஎல் முறைகேடுகள் குறித்த சர்ச்சை வெடித்ததும், மும்பையில் உள்ள ஐபிஎல் தலைமை அலுவலகத்திலும், மோடியின் அலுவலகங்களிலும் வருமான வரித்தறையினர் சோதனை நடத்தினர். பல ஆவணங்களைக் கைப்பற்றினர்.
ஆனால் இதுவரை அடானி மற்றும் வீடியோகான் நிறுவனங்கள் ஏலம் கேட்டு தொகையுடன் சமர்ப்பித்த ஆவணங்கள் மட்டும் கிடைக்கவில்லை என்று வருமான வரித்துறை அதிகாரிகள் தெரிவித்தள்ளனர்.
குஜராத்தைச் சேர்ந்த அடானி குழுமம் அகமதாபாத் அணியை வாங்க 5 பில்லியன் டாலர் ஏலத் தொகையுடன் விண்ணப்பித்திருந்தது. இந்தக் குழுமத்தின் தலைவர் கெளதம் அடானி ஆவார்.
இதேபோல, வேணுகோபால் தூத் தலைமையிலான வீடியோகான் நிறுவனம் புனே அணியை வாங்க 4 பில்லியன் டாலர் ஏலம் கேட்டிருந்தது.
இரு நிறுவனங்களும் ஏலத்தில் தோல்வி அடைந்தன. புனே அணியை சஹாரா குழுமம் வாங்கி விட்டது. அகமதாபாத் அணியை கேட்ட ரெண்டஸ்வஸ் நிறுவனம் பின்னர் கொச்சியைத் தேர்வு செய்தது. அதன் பிறகு நடந்தது அனைவரும் அறிந்ததே.
இந்த நிலையில்தான் அடானி மற்றும் வீடியோகான் நிறுவனங்கள் கொடுத்த ஏல ஆவணங்களைக் காணவில்லை என்று வருமான வரித்துறை கூறியுள்ளது. அது கிடைத்தால் பல முக்கியத் தகவல்கள் விசாரணைக்குக் கிடைக்கும் என அதிகாரிகள் நம்புகின்றனர்.
புனே, அகமதாபாத் அணிகளுக்கான ஏலத்தின் முதல் சுற்றில் பல கடுமையான நிபந்தனைகள் விதிக்கப்பட்டிருந்தன. அவை, அடானி மற்றும் வீடியோகான் நிறுவனங்களுக்குச் சாதகமானதாக இருந்த்தாக சர்ச்சை எழுந்தது. நிபந்தனைகளில் ஒன்று 100 மில்லியன் டாலர் வங்கி உத்தரவாதம் என்பதாகும்.
இதையடுத்து கிரிக்கெட் வாரியத் தலைவர் சஷாங் மனோகர் தலையிட்டு இந்த நிபந்தனைகளை ரத்து செய்து விட்டு புதிதாக ஏலம் நடத்த உத்தரவிட்டார். அந்த 2வது கட்ட ஏலத்தின்போது அடானி, வீடியோகான் நிறுவனங்களுக்கு சாதகமாக எதுவும் அமையவில்லை. இதனால் அதிக தொகைக்கு விண்ணப்பித்த ரெண்டஸ்வஸும், சஹாராவும் புனே, கொச்சி அணிகளை வென்றன என்பது குறிப்பிடத்தக்கது.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications