எரிமலை வெடிப்பால் பாதிக்கப்பட்டிருந்த இந்திய – ஐரோப்பிய விமான சேவை தொடங்கியது

Subscribe to Oneindia Tamil

Air India
டெல்லி: ஐஸ்லாந்து எரிமலை வெடிப்பால் ஏற்பட்ட பெரும் புகை மண்டலப் பிரச்சினையைத் தொடர்ந்து தற்போது ஐரோப்பிய நாடுகளுக்கான விமானப் போக்குவரத்து சகஜமடைந்துள்ளது. கடந்த ஒரு வார கால தடங்கலுக்குப் பின்னர் இன்று முதல் இந்தியாவிலிருந்து ஐரோப்பிய நாடுகளுக்கான விமானப் போக்குவரத்துத் தொடங்கியுள்ளது.

டெல்லி-லண்டன்-டெல்லி, டெல்லி- பிராங்க்பர்ட்-டெல்லி, மும்பை –லண்டன்-மும்பை, டெல்லி-நியூயார்க்-டெல்லி, மும்பை – நியூயார்க் –மும்பை, மும்பை-சிகாகோ-மும்பை, அமிர்தசரஸ்-லண்டன்-டோரண்டோ-அமிர்தசரஸ், அகமதாபாத்- மும்பை-நேவார்க்-மும்பை ஆகிய சேவைகள் இன்று முதல் தொடங்கியுள்ளன.

நாளை, மும்பை –லண்டன்-மும்பை இடையே கூடுதல் விமானம் இயக்கப்படவுள்ளது. இதற்கு போயிங் 747-400 விமானம் இயக்கப்ப்படும். இந்த விமானத்தைத்தான் சமீபத்தில் பிரதமர் மன்மோகன் சிங் தனது பிரேசில் பயணத்தின்போது பயன்படுத்தினார் என்பது குறிப்பிடத்தக்கது.

நேற்று டெல்லியிலிருந்து பாரீஸ், பிராங்க்பர்ட் நகரங்களுக்கான விமான சேவையை ஏர் இந்தியா தொடங்கியது.

ஜெட் ஏர்வேஸ் நிறுவனமும் டெல்லியிலிருந்து லண்டனுக்கும், மும்பையிலிருந்து லண்டனுக்கான சேவையை தொடங்கியுளது. அடுத்து டெல்லி நேவார்க், டோரன்டோ, மும்பை, சென்னை சேவைகளை பிரஸ்ஸல்ஸ் மூலமாக தொடங்கவுள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+