சென்னை, பஞ்சாப், கொல்கத்தாவுடன் போட்டி முடிவுகள் ஃபிக்ஸ் செய்யப்பட்டதா?

கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியின் உரிமையாளர்களில் ஒருவரான கெளரவ் பர்மன், ஐபிஎல் தலைவர் லலித் மோடியின் மருமகன் என்பது குறிப்பிடத்தக்கது.
சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கும், பஞ்சாப் அணிக்கும் தரம்சாலாவில் கடைசிப் போட்டி நடந்த்து. இதில் வென்றால்தான் அரை இறுதிக்குத் தகுதி பெற முடியும் என்ற நிலையில் சென்னை இருந்தது. அதேசமயம், இப்போட்டியின் முடிவால் பஞ்சாபுக்கு எந்தப் பாதகமோ, சாதகமோ இல்லாத நிலை.
இதேபோல கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியும், பஞ்சாப் அணியும் மோதிய போட்டியிலும் கொல்கத்தாவுக்குத்தான் அதிக நெருக்கடி இருந்தது.
இந்த நிலையில் இப்போட்டிகளின் முடிவுகள், சென்னை, கொல்கத்தாவுக்கு சாதகமாக இருப்பது போல மாற்றப்பட்டதாக, முன்கூட்டியே நிர்ணயிக்கப்பட்டு விட்டதாக தகவல்கள் கூறுகின்றன.
பஞ்சாப் அணியின் உரிமையாளரான மோஹித் பர்மனின் தம்பி கெளரவ் பர்மனும் இதில் ஒரு உரிமையாளர். இந்த கெளரவ், மோடியின் மருமகன் என்பது குறிப்பிடத்தக்கது.
சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, கேப்டன் டோணியின் அபார ஆட்டத்தால் கடைசி நேரத்தில் வெற்றி பெற்றது. அதாவது கடைசி ஓவரில் டோணி அதிரடியாக ஆடி வெற்றி தேடிக் கொடுத்தார். இதுதான் தற்போது சர்ச்சையை எழுப்பியுள்ளது.
சென்னை அணி அரை இறுதிக்குள் நுழைய வசதியாக பஞ்சாப் அணியின் பந்து வீச்சாளர்கள் தங்களது தீவிரத்தைக் குறைத்துக கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டதாக கூறப்படுகிறது.
இந்த மேட்ச் பிக்ஸிங் குறித்து தீவிர விசாரணை நடந்து வருவதாக தெரிகிறது.
இந்த செய்திக்கு ஆஸ்திரேலிய வீரரும், டெக்கான் சார்ஜர்ஸ் அணியின் கேப்டனுமான கில்கிறைஸ்ட் அதிர்ச்சி தெரிவித்துள்ளார். இதுகுறித்து முழுமையாக விசாரிக்கப்பட வேண்டும் என அவர் கோரியுள்ளார்.
-
ஸ்டாலின் கையில் ஆழ்வார்பேட்டை ரிப்போர்ட்! அப்பவே சொன்னோம்ல.. கழண்டு விழுகிறதா திமுக கூட்டணி கியர்? -
டிசிஎஸ் சைலெண்டாக செய்யும் விஷயம்.. 50000 ஊழியர்களுக்கு டார்கெட்.. தனி பிரிவு உருவாக்க முடிவு! -
கூட்டுறவு வங்கி பயிர்க்கடன் தள்ளுபடி.. அரசாணையில் குளறுபடி? "அப்பவே சொன்னோமே" சீறும் கோவை விவசாயிகள் -
2 மனைவிகளும் எனக்கு வேணும் சார்.. ஒரு நிமிஷம் போலீசுக்கே தலைசுத்திருச்சு.. திகைத்த திண்டுக்கல் -
என் சொந்த பணத்தையே பயன்படுத்துங்க.. விஜய்யின் டெல்லி பயணம்.. தனியார் ஜெட்டுக்கு சொந்த காசில் செலவு? -
இந்தியா கூட்டணியில் இணையுங்கள்.. அழைத்த ராகுல்.. நோ சொன்ன தவெக விஜய்.. என்ன காரணம்? -
வேலையில்லாத இளைஞர்களுக்கு அடிக்குது ஜாக்பாட்.. 'VIP' களுக்கு மாதம் ரூ.4000.. கையில் எடுக்கும் விஜய்! -
உதயநிதி ஸ்டாலின் கையில் காவேரி லிஸ்ட்.. ஜூன் 18ல் புள்ளிவிவர பதிலடியுடன் விஜய் போட்ட மாஸ்டர் பிளான் -
"5 லட்சம் AI ஏஜெண்டுகள்.." இனி முன்பு போல ITல் வேலை இருக்காது.. வெளிப்படையாக பேசிய டிசிஎஸ் சேர்மேன் -
அரசு ஊழியர்களுக்கு அழுத்தம் ஏற்படாது.. சேவை பெறும் உரிமைச் சட்டம் தான் பெஸ்ட்.. அன்புமணி -
3 மாசம் தாங்காது.. கடுகடுத்த ஸ்டாலின்! புகார் கூறிய அதிமுக! இன்று தவெக புஸ்ஸி ஆனந்த் முக்கிய முடிவு? -
விஜய்யின் கனவு திட்டம்.. கூவம், அடையாறு ஆறுகளை மாற்றப்போகும் மாஸ்டர்பிளான்.. கைகோர்க்கும் டெல்லி












Click it and Unblock the Notifications