கல்கி ஆசிரமத்தில் போதைப் பொருட்கள் பயன்படுத்தப்படவில்லை- கோர்ட்டில் அறிக்கை
சென்னை: கல்கி பகவான் ஆசிரமத்தில் பெண்களுக்குப் போதைப் பொருட்கள் எதுவும் கொடுக்கப்படவில்லை என்று ஆசிரம்ம் சார்பில் இன்று சென்னை உயர்நீதிமன்றத்தில் அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது.
ஆந்திர மாநிலத்தில், கல்கி ஆசிரமம் செயல்பட்டு வருகிறது. அங்கு வெளிநாட்டு பக்தர்களுக்கு போதை பொருள் கொடுத்து வசியப்படுத்துவதாகவும், சிறப்பு பூஜைகள் என்ற பெயரில் ஆயிரக்கணக்கான ரூபாய் வசூல் செய்யப்படுவதாகவும் புகார் எழுந்தது.
இது குறித்து கல்கி பகவானின் மகன் கிருஷ்ணா சென்னை உயர்நீதிமன்றத்தில், ஒரு மனுதாக்கல் செய்து ஆசிரமம் பற்றிய செய்திகளை வெளியிட தடை கேட்டார்.
இந்த வழக்கை நீதிபதி ராஜசூர்யா விசாரித்து கல்கி பகவான் ஆசிரமத்தில் என்ன நடக்கிறது என்பதை அறிக்கையாக தாக்கல் செய்ய உத்தரவிட்டார்.
இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது ஆசிரமம் சார்பில் வக்கீல் கோபால் ஆஜராகி அறிக்கையை தாக்கல் செய்தார்.
அதில்,கல்கி பகவான் ஆசிரமத்தில் எந்த மோசடியும் நடை பெறவில்லை. ஆன்மீக பணியில் ஈடுபடுவதற்கான பயிற்சி, தியான பயிற்சி, அளிக்கப்படுகின்றன. வேதங்கள் சொல்லித் தரப்படுகின்றன. போதை வஸ்துக்களோ, குளிர் பானத்தில் மயக்க மருந்து கலந்தோ இந்த ஆசிரமத்தில் கொடுப்பது கிடையாது.
இது தவறான குற்றச்சாட்டாகும். போதை பொருட்களுக்கு ஆசிரமம் எல்லையில் நிரந்தர தடை விதிக்கப்பட்டுள்ளது என்று தெரிவித்தார்.
இதையடுத்து மே . 8ம் தேதிக்கு வழக்கு தள்ளி வைக்கப்பட்டது.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications