ஜூன் முதல் சென்னைக்கு கடல் குடிநீர்-ஸ்டாலின்

சட்டசபையில் இன்று உள்ளாட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல்துறை மானியக் கோரிக்கைகள் மீது விவாதம் நடந்தது.
அப்போது பேசிய அதிமுக எம்.எல்.ஏ. அன்பழகன், மீஞ்சூர் கடல் நீரை குடிநீராக்கும் திட்டம், ஓகேனக்கல் கூட்டுக் குடிநீர் திட்டம் ஆகியவை எப்போது செயல்பாட்டுக்கு வரும் என்று கேள்வி எழுப்பினார்.
இதற்கு பதிலளித்து ஸ்டாலின் பேசுகையி்ல்,
சென்னை மீஞ்சூர் அருகே காட்டுப்பள்ளியில் கடல்நீரை குடி நீராக்கும் திட்டம் அதிமுக ஆட்சியில் தொடங்கப்பட்ட திட்டம் என்றாலும் முதல்வர் கருணாநிதி ஆட்சிக்கு வந்த பிறகு, அதை கிடப்பில் போடாமல் செயல்படுத்த உத்தரவு பிறப்பித்தார்.
அதன்படி சென்னை குடிநீர் வாரிய அதிகாரிகளையும், சம்பந்தப்பட்ட நிறுவனத்தினரையும் அழைத்துப் பேசி அந்த பணி முடுக்கி விடப்பட்டது.
இடையில் கடல் சீற்றம் காரணமாக பணியில் தொய்வு ஏற்பட்டது. இதில் சென்னை குடிநீர் வாரியத்தின் பணிகள் நூறு சதவீதம் முடிந்து விட்டது.
பணியின் சுணக்கம் காரணமாக அரசுக்கு இழப்பு ஏதுமில்லை. குழாய்கள் பதிக்கும் பணிகள் தனியார் நிறுவனத்தால் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்த திட்டம் வரும் ஜூன் இறுதியில் நிறைவேறும்.
அதன் பிறகு சென்னை மக்களுக்கு தினமும் 100 மில்லியன் லிட்டர் குடிநீர் கிடைக்கும் என்பதை தெரிவித்து கொள்கிறேன்.
ஒகேனக்கல் கூட்டு குடிநீர் திட்டம் நிர்ணயிக்கப்பட்ட காலத்துக்கு முன்னதாகவே நிறைவேற்றப்படும்.
கர்நாடக நீர்வளத்துறை அமைச்சர் பசவராஜ் பொம்மை இந்தத் திட்டத்தை சட்டரீதியாக எதிர்கொள்ளப் போவதாக கூறியதாக இங்கே பேசிய உறுப்பினர் குற்றம் சாட்டினார். நான் இது குறித்து எனது பதில் உரையில் விரிவாகக் கூறுகிறேன். ஆனால், கர்நாடக அமைச்சர் தெரிவித்தது போல் 1.7 டி.எம்.சி. தண்ணீரோ, 2.5 டி.எம்.சி. தண்ணீரையோ காவிரியிலிருந்து எடுக்கவில்லை.
1.4 டி.எம்.சி. தண்ணீர் எடுப்பதற்கு மத்திய அரசிடம் ஒப்புதல் பெற்ற பிறகு தான் பணி நடக்கிறது. ஓகேனக்கல்லில் தலைமையிடத்து குடிநீர் பணி தமிழக எல்லையில்தான் துவக்கப்பட்டுள்ளது. மத்திய அரசு அனுமதி பெற்றுதான் இந்த பணி நடக்கிறது.
இந்தத் திட்டத்தை கால நிர்ணய தேதிக்கு முன்பே நிறைவேற்ற அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது என்றார்.
2011ல் சென்னை மாநகராட்சி விரிவாக்கம்:
முன்னதாக நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல்துறை மானிய கோரிக்கைக்கான கொள்கை விளக்க குறிப்புகளை ஸ்டாலின் தாக்கல் செய்தார். அதில் கூறப்பட்டுள்ளதாவது:
சென்னையின் 8 சட்டமன்ற தொகுதிகளில் அமைந்துள்ள 9 நகராட்சிகள், 8 பேரூராட்சிகள், 25 ஊராட்சிகள் ஆகியவற்றை சென்னை மாநகராட்சியின் எல்லைகளுக்குள் கொண்டு வருவதென அரசு முடிவு செய்துள்ளது.
இந்த விரிவாக்கம் தற்போதைய உள்ளாட்சி அமைப்புகளின் பதவிக் காலம் முடிவடைந்தவுடன் 2011ம் ஆண்டு நடைமுறைக்கு வரும்.
தண்டையார்பேட்டை தொற்றுநோய் மருத்துவமனையை நவீனப்படுத்த ஏற்கனவே ரூ.8 கோடி ஒதுக்கப்பட்டு தற்போது பணி நடந்து வருகிறது. 240 படுக்கை வசதி கொண்ட இந்த மருத்துவமனை 360 படுக்கை வசதி கொண்டதாக தரம் உயர்த்தப்படும்.
கடந்த 4 ஆண்டுகளில் உள்ளாட்சி நகராட்சி, ஊரக வளர்ச்சி துறையில் குறிப்பிடத்தக்க வெற்றி சாதனைகள் புரிந்து இருக்கும் இந்த நேரத்தில் அடுத்து வர இருக்கும் சவால்களை எதிர் நோக்கவும் தயார் நிலையில் அரசு உள்ளது என்று கூறப்பட்டுள்ளது.
-
அதிமுக மாஜிகளுக்கு கட் அவுட்..திமுக உ.பி.களுக்கு கெட் அவுட்டா? 19 சீட்டுகளை அள்ளிய ’அம்மா’ பிள்ளைகள் -
ஸ்டாலினின் ரூ. 8000 கூப்பன் Vs எடப்பாடியின் இலவச Fridge திட்டம்! யாருக்கெல்லாம் கிடைக்கும்? -
’கதாநாயகன்' திமுகவின் தேர்தல் அறிக்கை வெளியாகியது.. ஸ்டாலின் கொடுத்த வாக்குறுதிகள் என்ன? -
முதல்வர் ஸ்டாலின் சொத்து மதிப்பு எவ்வளவு? சொந்தமாக வாகனம், நகை எதுவும் இல்லை! -
சட்டமன்ற தேர்தல்.. புல் ஃபோர்ஸில் இறங்கிய ஸ்டாலின்! முதல் நாளே வேட்பு மனு தாக்கல் -
கொளத்தூரில் ஸ்டாலின்.. எடப்பாடியில் பழனிசாமி! ஜாம்பவான்களை எதிர்க்கும் தவெக வேட்பாளர்கள் யார்? யார்? -
ரூ.8000 கூப்பன் முதல் 2 மடங்கு உயரும் உரிமை தொகை வரை.. திமுகவின் 7 முக்கிய வாக்குறுதிகள்! ஸ்டாலின் அறிவிப்பு -
35 லட்சம் கல்லூரி மாணவர்களுக்கு லேப்டாப்.. திமுக அளித்த மேஜர் வாக்குறுதி! -
2000 ரூபாய் மகளிர் உரிமை தொகை சாத்தியமா .. மக்கள் அறிய வேண்டிய பெரிய உண்மை -
திமுக கூட்டணிக்கு ஆதரவு தெரிவித்த முன்னாள் MLA செ.கு.தமிழரசன்! இரட்டை இலையில் வென்றவர்! அதான் ஹைலைட் -
விவசாயிகளுக்கு திமுகவின் ‘ஜாக்பாட்’! மீட்டர் பொருத்தப்படாத நவீன பம்ப்செட் வழங்கப்படும் என வாக்குறுதி -
DMK Manifesto: முதியோர் உதவித்தொகை இனி ரூ. 2 ஆயிரமாக உயர்வு.. ஸ்டாலின் அதிரடி அறிவிப்பு












Click it and Unblock the Notifications