டிராவல்ஸ் நிறுவன மோசடியால் சிம்லாவில் சிக்கித் தவிக்கும் தமிழக பயணிகள்
நாகர்கோவில்: கன்னியாகுமரி மாவட்டத்திலிருந்து சிம்லாவுக்கு சுற்றுலா சென்ற பயணிகள், டிராவல்ஸ் நிறுவனம் மோசடி செய்து விட்டதால் ஹோட்டலுக்குப் பில் கட்ட முடியாமல் தவித்து வருகின்றனர்.
மகேந்திரகிரி ஐ.எஸ்.ஆர்.ஓ. விண்வெளி ஆராய்ச்சி மையத்தில் பணிபுரியும் ஊழியர்கள் தங்களது குடும்பத்தினருடன் சிம்லாவுக்கு சுற்றுலா சென்றனர்.
கடந்த 17-ந்தேதி திருவனந்தபுரம் விமான நிலையத்தில் இருந்து 44 பேர் புறப்பட்டு சென்றனர். டிராவல்ஸ் நிறுவனம் ஒன்று இந்த சுற்றுலாவுக்கு ஏற்பாடு செய்திருந்தது. 44 பேருக்கு சேர்த்து மொத்தம் 15 லட்சம் ரூபாயை வாங்கிக்கொண்ட டிராவல்ஸ் நிறுவனம் தங்குமிடம் மற்றும் போக்குவரத்து ஏற்பாடுகளை செய்து தருவதாக உறுதி அளித்திருந்தது.
சுற்றுலா சென்ற அனைவரும் சிம்லாவில் உள்ள அஜ்மால் ரெசிடென்சி லாட்ஜில் தங்க வைக்கப்பட்டனர். இன்று காலை 6 மணிக்கு 44 பேரும் அங்கிருந்து புறப்பட்டு வேறு இடத்தை சுற்றிப்பார்க்க செல்ல வேண்டும். இதற்காக அறையை காலி செய்தபோது ஓட்டல் நிர்வாகத்தினர் இவர்களை வெளியில் செல்ல அனுமதிக்கவில்லை.
நீங்கள் தங்கியதற்கான ரூ.45 ஆயிரம் கட்டணத்தை டிராவல்ஸ் நிறுவனம் கட்டவில்லை. பணத்தை கட்டிய பிறகுதான் நீங்கள் வெளியில் செல்ல முடியும் என்று கூறிவிட்டனர்.
இது தொடர்பாக சம்பந்தப்பட்ட ஏஜெண்டுகளிடம் போன் செய்து கேட்டபோது சரியான பதில் வரவில்லை. இதனால் 44 பேரும் சிம்லாவில் தவித்து வருகிறார்கள்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications