கசாப்பை பாக்.கிடம் ஒப்படைக்க முடியாது - இந்தியா
Subscribe to Oneindia Tamil

பாகிஸ்தான் உள்துறை அமைச்சர் ரஹ்மான் மாலிக் நேற்று இஸ்லாமாபாத்தில் நடந்த நிகழ்ச்சியில் இந்தியத் தூதர் சரத் சபர்வாலை சந்தித்தார். அப்போது , மும்பை தாக்குதல் தொடர்பான வழக்கில் கசாப்பிடம் விசாரணை நடத்த இந்தியா அனுமதிக்க வேண்டும்.
கசாப்பாக்கு எதிராக பாகிஸ்தான் கோர்ட் பிடிவாரண்ட் பிறப்பித்துள்ளது. எனவே கசாப்பை எங்களிடம் ஒப்படைக்க இந்தியா முன்வர வேண்டும் என்றார்.
ஆனால் மாலிக்கின் கோரிக்கையை இந்தியா நிராகரித்து விட்டது. இதுகுறித்து மத்திய வெளியுறவுத்துறை செயலாளர் நிரூபமா ராவ் இன்று கூறுகையில், கசாப்பை யாரிடமும ஒப்படைக்க முடியாது. அந்தக் கேள்விக்கே இடமில்லை.
மே மாதம் மும்பைத் தாக்குதல் வழக்கில் மும்பை தனி கோர்ட் தீர்ப்பளிக்கவுள்ளது என்றார்.












Click it and Unblock the Notifications