பட்ஜெட் வெட்டுத் தீர்மானம், காங்கிரஸ் கூட்டணி அரசு, எதிர்க்கட்சிகள் திட்டம், நாடாளுமன்ற கூட்டம், opp
டெல்லி: பெட்ரோல், டீசல் மீதான வரி உயர்வைத் திரும்பப் பெறக் கோரி நிதி மசோதா மீது எதிர்க்கட்சிகள் நாளை வெட்டுத் தீர்மானம் கொண்டு வரவுள்ளன.
இந்தத் தீர்மானத்தின் மீது வாக்கெடுப்பு நடத்தப்படும் என்பதால் அதை முறியடிக்க காங்கிரசும் வியூகம் வகுத்து வருகிறது.
வெட்டுத் தீர்மானத்தை கொண்டு வர இடதுசாரி கட்சிகள் உள்ளிட்ட 13 கட்சிகள் அணியும் திட்டமிட்டுள்ளது. இதற்கு பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியும் ஆதரவு அளிக்கவுள்ளது.
இந்த 13 கட்சி அணியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், இந்திய கம்யூனிஸ்ட்,ஆர்.எஸ்.பி, பார்வர்ட் பிளாக், அதிமுக, சமாஜவாடி கட்சி, ராஷ்ட்ரீய ஜனதாதளம், பிஜு ஜனதாதளம், தெலுங்கு தேசம், ராஷ்ட்ரீய லோக தளம், லோக் ஜனசக்தி, மதச்சார்பற்ற ஜனதாதளம், இந்திய தேசிய லோக தளம் ஆகியவை இடம் பெற்றுள்ளன.
இந்த வெட்டுத் தீர்மானத்தி்ன் மூலம் அரசைக் கவிழ்க்கும் நோக்கம் இல்லை என்றும், விலைவாசியைக் கட்டுப்படுத்துவது தான் நோக்கம் என்றும் பாஜக, மற்றும் 13 கட்சி அணிகள் தெரிவித்துள்ளன.
ஆனாலும் எதிர்க் கட்சிகளின் இந்தத் தீர்மானம் வென்றால் அரசு மெஜாரிட்டியை இழந்துவிட்டதாகவே அர்த்தமாகும். இதனால் அரசு பதவி விலக வேண்டிய நிலைமை ஏற்படும்.
இதனால் இந்தத் தீர்மானத்தை முறியடிக்க காங்கிரஸ் தீவிரமான வியூகங்கள் வகுத்து வருகிறது.
மக்களவையில் மொத்தமுள்ள 543 உறுப்பினர்களில் 13 கட்சி அணிக்கு 87 உறுப்பினர்கள் உள்ளன. பாஜக கூட்டணியில் 151 எம்பிக்கள் உள்ளனர். ஆக மொத்தம் 228 எம்.பிக்கள் உள்ளனர். வெட்டுத் தீர்மானத்தை வெற்றி பெறச் செய்ய தேவையான 272 என்ற எண்ணிக்கையை இவர்கள் எட்டவில்லை.
ஆனால், ஆளும் காங்கிரஸ் கூட்டணிக்கு 265 எம்பிக்கள் உள்ளனர். எனவே 13 கட்சி அணியும் பாஜக கூட்டணியும் கைகோர்த்தாலும் அரசுக்கு ஆபத்தில்லை.
மாயாவதி கைகோர்த்தால் நிலைமை விபரீதம்:
ஆனால், 21 எம்.பிக்களை கொண்ட உத்தரப் பிரதேச முதல்வர் மாயாவதி தலைமையிலான பகுஜன் சமாஜ் கட்சி எதிர்க் கட்சிகளுடன் கைகோர்த்தால் அரசுக்கு ஆபத்து ஏற்பட வாய்ப்புண்டு.
இதுவரை மாயாவதி தனது நிலையை அறிவிக்கவில்லை. மாயாவதி மீது பல சொத்துக் குவிப்பு வழக்குகள் உள்ளதாலும் அவற்றை சிபிஐ விசாரித்து வருவதாலும் அவ்வளவு எளிதில் மத்திய அரசை மாயாவதி பகைத்துக் கொள்ள மாட்டார் என்று தெரிகிறது.
அவரது கட்சி நடுநிலை வகித்தால் கூட போதும், அரசு தப்பிவிடும்.
இந் நிலையில் இந்த வெட்டுத் தீர்மானத்தை எப்படி எதிர்கொண்டு தோற்கடிப்பது என்று காங்கிரஸ் தலைவர்கள் கடந்த ஒருவாரமாக ஆலோசனை நடத்தி, புதிய வியூகத்தை அமைத்துள்ளனர்.
வெட்டுத் தீர்மானத்தை முறியடிக்க காங்கிரஸ் அணிக்கு இன்னும் 7 எம்பிக்களன் ஆதரவு தான் தேவை. இதையடுத்து மக்களவையில் உள்ள சிறிய கட்சிகள் மற்றும் சுயேச்சை எம்.பிக்கள் 19 பேருடன் காங்கிரஸ் பேச்சு நடத்தியுள்ளது.
மேலும் மாயாவதியை தன் பக்கம் இழுக்கவும் முயற்சி மேற்கொண்டுள்ளது. சொத்துக் குவிப்பு வழக்கில் மத்திய அரசு வழக்கறிஞர் சமீபத்தில் மாயாவதிக்கு ஆதரவாக அறிக்கை தாக்கல் செய்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
எனவே மாயாவதி ஓட்டெடுப்பை புறக்கணிக்கததாலே வெட்டுத் தீர்மானத்தை காங்கிரஸ் கூட்டணி முறியடித்து விட முடியும்.
-
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்!












Click it and Unblock the Notifications