ஜிஎம்ஆர் இன்டஸ்ட்ரீஸை வாங்குகிறது ஈஐடி பாரி

இதற்கான ஒப்பந்தம் கையெழுத்திடப்பட்டுள்ளதாக பாரி நி்றுவனம் அறிவித்துள்ளது.
இந்த ஒப்பந்த இரு பகுதிகளாக நிறைவேற்றப்பட உள்ளது. ஜிஎம்ஆர் குழுமத்தின் 51 சதவீத பங்குகளுக்காக ரூ.110 கோடி செலுத்தப்படும். இந் நிறுவனத்தின் கடன்கள் ரூ.450 கோடியை பாரி நிறுவனம் ஏற்கும். இந்த வகையில் ரூ.560 கோடிக்கு ஜிஎம்ஆர் நிறுவனத்தை வாங்குகிறது ஈஐடி பாரி நிறுவனம்.
ஜிஎம்ஆரை வாங்குவதன் மூலம் பாரி நிறுவனம் 60 முதல் 65 சதவீதம் வரை விரிவாக்கம் பெறும் என்று முருகப்பா குழும தலைவர் வெள்ளையன் தெரிவித்தார்.
தற்போதைய நிலவரப்படி ஜிஎம்ஆர் இன்டஸ்ட்ரீஸ் புரமோட்டர்கள் 74.85 சதவீத பங்குகளை வைத்துள்ளனர். இதில் 51 சதவீத பங்குகள் ரூ.57 வீதம் ஈஐடி பாரிக்கு விற்கப்படுகின்றன.
மீதி 23.85 சதவீத பங்குகளில் 20 சதவீதத்தை வெளிச் சந்தை விலையான ரூ.110.69 வீதம் பாரி நிறுவனம் வாங்கிக் கொள்ளும்.
ஜிஎம்ஆர் நிறுவனத்தை மீண்டும் லாபத்துக்கு திருப்பவே இந்த நடவடிக்கை என அறிவிக்கப்பட்டுள்ளது. சென்ற நிதியாண்டில் இந்நிறுவனம் ரூ. 58.43 கோடி நஷ்டத்தைச் சந்தித்தது.
ஜிஎம்ஆர் நிறுவனத்துக்கு ஆந்திரா, கர்நாடகாவில் மட்டும் மூன்று சர்க்கரை ஆலைகள் உள்ளன. இவற்றின் மொத்த பிழிதிறன் நாளொன்றுக்கு 11,000 டன். பாரி நிறுவனத்துக்கு 5 பெரும் ஆலைகள் உள்ளன. இவற்றின் மொத்த திறன் நாளொன்றுக்கு 19,000 டன் ஆகும்.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications