ஹாலந்து: விடுதலைப் புலிகளுக்கு நிதி திரட்டிய 7 பேர் கைது!

இது குறித்து போலீசார் கூறுகையில், இந்த 7 பேரும் விடுதலைப் புலிகள் இயக்கத்துக்காக பல வழிகளில் நிதி திரட்டி வந்தனர். நிதி திரட்டும் நிகழ்ச்சிகள் நடத்தியும், டிவிடிக்கள், கேலண்டர்கள், சட்ட விரோத லாட்டரிகள் விற்றும் நிதி திரட்டி வந்தனர்.
இதையடுத்து நாடு முழுவதும் 16 வீடுகள் மற்றும் வர்த்தக மையங்களில் சோதனை நடத்தி இந்த 7 பேர் கைது செய்யப்பட்டனர். இவர்களன் கம்ப்யூட்டர்கள், தொலைபேசிகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.
மேலும் சில முக்கிய ஆவணங்களும் 40,000 யூரோ கரன்சியும் பறிமுதல் செய்யப்பட்டது.
இந்த 7 பேரும் ஹாலந்தில் செயல்பட்டு வரும் தமிழ் ஒருங்கிணைப்பு கமிட்டி, தமிழர் மறுவாழ்வு இயக்கம், தமிழ் இளைஞர் இயக்கம், தமிழ் பெண்கள் இயக்கம், தமிழ் கலை மற்றும் கலாச்சார இயக்கத்தைச் சேர்ந்தவர்கள் ஆவார்.
இந்தக் குழுவின் தலைவராக ஹேக் நகரைச் சேர்ந்த 45 வயதான தமிழர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார் என்று கூறப்பட்டுள்ளது.
இந்த தகவல்களை ஹாலந்து (நெதர்லாந்து) நாட்டுக்கான இலங்கை தூதர் கிரேஷ் ஆசீர்வாதன் வெளியிட்டுள்ளார்.
நெதர்லாந்து உள்பட ஐரோப்பிய யூனியன் நாடுகளில் புலிகள் இயக்கத்துக்கு தடை விதி்க்கப்பட்டுள்ளதால், அதற்கு நிதி திரட்டுவது சட்ட விரோதமாகும் என்பது குறிப்பிடத்தக்கது.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications