தமிழர்களுடன் இணைந்து இனப்படுகொலைக்கு எதிராக அமிதாப் போராட வேண்டும் – சீமான்
சென்னை: தமிழர்களின் உணர்வுகளுக்கு மதிப்பளித்து கொழும்பு இந்திய சர்வதேச திரைப்பட விழாவில் கலந்துகொள்வதை மறு பரிசீலனை செய்யும் நடிகர் அமிதாப் பச்சனுக்கு நன்றி தெரிவித்துள்ள நாம் தமிழர் இயக்க தலைவர் சீமான், தமிழ் மக்களுடன் இணைந்து இனப் படுகொலைக்கு எதிராக போராட வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்துள்ளார்.
இதுகுறித்து சீமான் வெளியிட்டுள்ள அறிக்கை...
இலங்கையின் கொடூர முகத்தை மறைப்பதற்காக இந்திய அரசின் உதவியுடன் இலங்கை அரசு கொழும்பில் சர்வதேச திரைப்பட விருது வழங்கும் விழாவை வரும் ஜுன் 2 முதல் 4 ஆம் தேதி வரை நடத்த திட்டமிட்டுள்ளது.
இதில் இந்தி நடிகர் அமிதாப் பச்சன் முக்கிய பங்காற்றுவதாகவும் அறிவிக்கப்பட்டிருந்தது.
தமிழர்களின் இனப்படுகொலையை மறைப்பதற்காக நடத்தப்படும் இந்த விருது வழங்கும் நிகழ்ச்சியில் அமிதாப் கலந்து கொள்வதற்கு கண்டனம் தெரிவித்து எமது நாம் தமிழர் தொண்டர்கள் மும்பையில் உள்ள அமிதாப் அவர்களின் வீட்டு முன்பு கடந்த ஞாயிறு அன்று முற்றுகைப் போராட்டம் நடத்தினர்.
அமிதாப் அவர்களைச் சந்தித்து 10 கோடித் தமிழர்களின் உணர்வுகளைப் புரிந்து கொண்டு நிகழ்ச்சியில் கலந்து கொள்ளக் கூடாது என்று கோரிக்கை மனுவையும் அளித்தனர்.
இந்த நிலையில் போராடிய எமக்கு மாபெரும் வெற்றி கிடைத்துள்ளது. அமிதாப் இது குறித்து கருத்து தெரிவிக்கையில் தமிழர்களின் உணர்வுகளைத்தான் புரிந்துள்ளதாகவும், அவர்களது உணர்வுக்கு மதிப்பளிப்பதாகவும் தெரிவித்துள்ளார். விரைவில் இது குறித்து நிகழ்ச்சி நடத்தும் நிறுவனம் உட்பட அனைவரிடமும் பேசி இணக்கமான, நல்ல முடிவைத் தெரிவிப்பதாகவும் கூறியுள்ளார்.
கருப்புக்கொடி, ஆர்ப்பாட்டம் என்றாலே தமக்கு எதிரான ஒன்று என்று நினைக்கும் தலைவர்கள் மத்தியில், உலகெங்கும் வாழும் 10 கோடி தமிழர்களின் வேதனையான உணர்வுகளைப் புரிந்து கொண்டு அதற்கு மதிப்பளித்து தமிழர்களுக்கு சாதகமான முடிவை எடுப்பதாக தெரிவித்துள்ள அமிதாப்பிற்கு நாம் தமிழர் இயக்கம் சார்பாக நன்றியைத் தெரிவித்துக் கொள்கின்றேன்.
அமிதாப் அவர்களைப் பின்பற்றி ஷாருக்கான், ஐஸ்வர்யாராய் உட்பட பிற நடிகர்களும் கலந்து கொள்ளக் கூடாது என்று கேட்டுக் கொள்கின்றேன். இந்த வெற்றி எமக்கு மட்டுமல்ல உலகெங்கும் வாழும் எம் தமிழ்ச் சொந்தங்களுக்கு கிடைத்த வெற்றியாகும்.
அமிதாப் அவர்கள் இதோடு நின்று விடாது ஈழத்தில் சிங்கள வெறியர்களால் நிகழ்த்தப்பட்ட தமிழினப் படுகொலைக்கு எதிராக எம் தமிழ்ச் சொந்தங்களுடன் இணைந்து போராட வேண்டும் என்றும் கேட்டுக் கொள்கின்றேன் என்று சீமான் கூறியுள்ளார்.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications