அதிமுக பெண் எம்.எல்.ஏக்கள் தாக்கியதாக அவை காவலர்கள் புகார்
சென்னை: அதிமுக எம்எல்ஏக்களை சட்டசபையை விட்டு வெளியேற்றியபோது அவர்கள் தங்களைத் தாக்கியதாக அவைக் காவலர்கள் சபாநாயகர் ஆவுடையப்பனிடம் புகார் தந்துள்ளனர்.
இது தொடர்பாக சட்டசபையில் பேசிய அதிமுக எம்எல்ஏ செங்கோட்டையன்,
நாடு தழுவிய பந்த் நடந்தபோது, அதிமுக தனது கருத்தை வெளியிட்ட நேரத்தில் அவையை விட்டு வெளியேற்றப்பட்டோம்.
அப்போது அதிமுக எம்.எல்.ஏ.க்கள் இளமதி சுப்பிரமணியம், பதர் சயீத் போன்ற பெண் உறுப்பினர்கள் அவைக் காவலர்களால் அத்துமீறி தாக்கப்பட்டனர் என்பதை நினைவூட்ட விரும்புகிறேன். மக்களுக்கு போலீசார் பாதுகாப்பு தர வேண்டுமே தவிர, சட்டமன்றத்திலேயே இத்தகைய செயல் நடந்தேறியிருப்பதை கவனத்துக்கு கொண்டு வருகிறேன் என்றார்.
இதற்கு பதிலளித்த சபாநாயகர் ஆவுடையப்பன், அவர்கள்தான் தங்களைத் தாக்கியதாக காவலர்கள் என்னிடம் புகார் கொடுத்துள்ளனர். நீங்கள் என் அறைக்கு வாருங்கள். இதுபற்றி அங்கு பேசிக் கொள்ளலாம் என்றார்.
எம்.எல்.ஏ.க்கள் செல்போன் பேசக் கூடாது:
முன்னதாக சபாநாயகர் வெளியிட்ட அறிவிப்பில்,
சட்டசபைக்குள் வரும்போது செல்போன்களை ஆப் செய்ய வேண்டும் என்று ஏற்கனவே சுற்றறிக்கை விடப்பட்டது. என்றாலும் சில உறுப்பினர்கள் செல்போன் பேசுவதாக அறிகிறேன்.
எனவே உறுப்பினர்களும், அலுவலக பணிக்காக சட்டசபைக்குள் வரும் மற்றவர்களும் தங்கள் செல்போன்களை ஆப் செய்ய வேண்டும் என்றார்.
-
கதை ஓவர்! அதிமுகவில் இருந்து நீக்கியதை எதிர்த்த மனுவை வாபஸ் பெற அனுமதி கேட்ட ஒபிஎஸ்.. இன்று விசாரணை -
தவெகவில் இணைந்த 5 மாஜி அமைச்சர்கள், 7 Ex MLAs! இதுவரை அதிமுகவில் இருந்து விலகியவர்கள் யார் யார்? -
நீ பாவம் பண்ணியிருக்க சேகர்பாபு... மேடையிலேயே நேருக்கு நேராக ஆ ராசா பேச்சு -
உள்ளே யாரு, அவனை வெளியே வர சொல்லு! வசமா பிடிபட்ட மனைவி.. தப்பிய கணவனை சுற்றி வளைத்த தஞ்சாவூர் போலீஸ் -
மாமூல் தொல்லையில் இருந்து முதல்வர் விஜய் எங்களை காப்பாற்றிவிட்டார்.. டாஸ்மாக் பணியாளர் சங்கம் -
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
மேகதாதுவில் அணை கட்ட தமிழகத்தின் அனுமதி தேவையில்லை.. கர்நாடக முதல்வரானதும் டிகே சிவக்குமார் பேச்சு -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
தமிழகம் முழுவதும் டாஸ்மாக் கடைகள், பார்களை தனியாரிடம் ஒப்படைக்க திட்டம்? விஜய் எடுக்க போகும் முடிவு? -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக












Click it and Unblock the Notifications